பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௨௦/220

அகநானூறு

[பாட்டு


சென்னி - ஒளிவிடும் தலை எனலுமாம். சேவல் - ஈண்டுக் குறும்பூழ்ச் சேவல். மீண்டோர் - மீண்டு சென்றார். ஆகிய எனும் பாடத்திற்கும் ஆகும் பொருட்டென்பதே பொருள். நலனும் உயவுத் துணையாக நம்மொடு பசலை நோன்றிருந்து, தம்மொடு தானே சென்றது, இனி, நல்கார் கொல்லோ என்று உரைத்தலுமாம். இதற்குச் சென்றது என்றது சென்ற என விகாரமாயிற்று என்க.



104. முல்லை


[வினை முற்றி மீளுந் தலைமகற்குத் தோழி சொல்லியது.]



வேந்துவினை முடித்த காலைத் தேம்பாய்ந்
தினவண் டார்க்குந் தண்ணறும் புறவின்
வென்வேல் இளையர் இன்புற வலவன்
வள்புவலித் தூரின் அல்லது முள்ளுறின்
௫) முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா

நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்
வாங்குசினை பொலிய ஏறிப் புதல
பூங்கொடி அவரைப் பொய்யதள் அன்ன !
உள்ளில் வயிற்ற வெள்ளை வெண்மறி
க0) மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய

புன்தலைச் சிறாரோ டுகளி மன்றுழைக்
கவையிலை ஆரின் அங்குழை கறிக்கும்
சீறூர் பலபிறக் கொழிய மாலை
இனிதுசெய் தனையால் எந்தை வாழிய
கரு) பனிவார் கண்ணள் பலபுலந் துறையும்

ஆய்தொடி யரிவை கூந்தல்
போதுகுரல் அணிய வேய்தந் தோயே.

- மதுரை மருதனிளநாகனார்.


(சொ - ள்.) கச. எந்தை - எம் தலைவனே!

க-எ. வேந்து வினை முடித்த காலை - வேந்தன் வினையை முடித்த காலத்தே, தேம் பாய்ந்து இன வண்டு ஆர்க்கும் - திசைகள் தோறும் பறந்து கூட்டமாய வண்டுகள் ஆரவாரிக்கும், தண் நறும் புறவில் - குளிர்ந்த நறிய முல்லை நிலத்தே, வென்வேல் இளையர் இன்புற - வென்றி பொருந்திய வேலினையுடைய வீரர் இன்பம் அடைய, வலவன் வள்பு வலித்து ஊரின் அல்லது - பாகன் கடிவாளத்தினை இழுத்துப் பிடித்துச் செலுத்தின் அல்லது, முள் உறின் முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா - தாற்றுக்கோல் தீண்டின் கடல் சூழ்ந்த உலகே ஆதி எனும் செலவிற்குப் போதாத, கடும்பரி நல்நால்கு பூண்ட நெடுந்தேர் - மிக்க வேகமுடைய நல்ல நான்கு குதிரைகள் பூட்டப்பெற்ற