உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108]

களிற்றியானை நிரை

௨௨௭(227)

(முடிபு) தலைவ! நீ செலவு அயரக் கேட்டொறும் என் . தோழியும், பல நினைந்து, என்னகத்து இடும்பை களைமார், வம்பலர் வெண் சோறு பாந்துவதும் வடுகர் அருமுனையாவது மாகிய சுரத்தினை நீந்தி, வரையகச் சீறூர் மாலை இன் றுணையாகி, காலை மணமனை கமழும் கானம் நின்னொடு வரும்.

(வி - ரை.) வயிறு தின்று - வயிறு நிறையத் தின்று. அட்ட வெண்சோறு எனவும், வால் நிண முருக்கிய வெண்சோறு எனவும் கூட்டுக. அடுதலால் நிணம் உருகிய தென்க. வம்பலர் வெண் சோறு மாந்தும் முனை எனவும், வடுகர் அடுமுனை எனவும் தனித் தனி இயையும். பகடு - பகட்டினை. ஒரு காற் பட்டம் - ஒரே துறை யினையுடைய ஓடை. புழல், பூவிற்கு ஆகுபெயர். மாலை இன் துணை யாகி என்பதற்கு - மாலைப் பொழுதில் நீ இனிய துணை யாகை யாலே என்றுரைத்தலுமாம். இதற்கு ஆகி என்ற தனை ஆக எனத் திரிக்க. |

(உ - றை.) ஓடையிலே நீருண்டு அதினின்றும் ஏறமாட்டாத முடம் பட்ட உரனுடைப் பகட்டிற்குச் சிறார் இருப்பைப் பூவை மரத்தினின்றும் பிரித்து மரையினைக் கடிந்து ஊட்டினாற்போல, களவொழுக்கமாகிய இன் பத்தை நுகர்ந்து, இவ்வொழுக்கத்தினின்றும் நீங்கி வரைவொடு புக மாட்டாது வருந்தும் நினக்குக் குற்றேவன் மகளாகிய யான் தலைமகளைச் சுற்றத்தினின்றும் பிரித்து நொதுமலர் வரைவினை மாற்றி உடன்போக் கிற்கு ஒருப்படுத்தாநின்றேன் என்பது.



108. குறிஞ்சி


[தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.]



புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்
கொத்தன்று மன்னால் எவன்கொல் முத்தம்
1வரைமுதல் சிதறி யவைபோல் யானைப்
புகர்முகம் பொருத புதுநீர் ஆலி
ரு) பளிங்குசொரி வதுபோல் பாறை வரிப்பக்

கார்கதம் பட்ட கண்ணகன் விசும்பின்
விடுபொறி ஞெகிழியில் கொடிபட மின்னிப்
படுமழை பொழிந்த பானாட் கங்குல்
ஆருயிர்த் துப்பில் கோண்மா வழங்கும்
க0) இருளிடைத் தமியன் வருதல் யாவதும்

அருளான் வாழி தோழி அல்கல்
விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ யரவின்
அணங்குடை யருந்தலை பைவிரிப் பவைபோல்
காயா மென்சினை தோய நீடிப்
கரு) பஃறுடுப் பெடுத்த அலங்குகுலைக் காந்தள்

அணிமலர் நறுந்தா தூதுந் தும்பி


பாடம். 1. வரை மிசைச் சிதறியவை.