உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௨௮(228)

அகநானூறு

[பாட்டு



கையாடு வட்டில் தோன்றும் -
மையாடு சென்னிய மலைகிழ வோனே.

- தங்காற் பொற்கொல்லனார்.


(சொ - ள்.) கக. தோழி வாழி -

கஉ-அ. விரவுப் பொறிமஞ்ஞை வெரீஇ - புள்ளிகள் விரவிய மயிலைக் கண்டஞ்சி, அரவின் அணங்குடை அரும் தலை பை விரிப் பவை போல் - பாம்பின் வருத்தத்தைச் செய்யும் அரிய நஞ்சினை யுடைய தலைகள் படத்தை விரிப்பன போல, காயா மென் சினை தோய - காயாவின் மெல்லிய சினைகள் தோய, நீடிப் பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் அணி மலர் - நீண்டு தூக்கிய பல துடுப்புகள் போலும் அசையும் குலைகளையுடைய காந்தளது அழகிய மலரின், நறும் தாது ஊதும் தும்பி - நறிய தாதினைக் குடைந்துண்ணும் வண்டுகள், கை ஆடு வட்டில் தோன்றும் - கையின் கண் வைத்து ஆடும் வட்டுப் போலத் தோன்றும், மை ஆடு சென்னிய மலை கிழவோன் - மேகம் தவழும் சிமையங்களையுடைய மலைக்கு உரியனாகிய நம் தலைவன்,

உ- கக. முத்தம் வரை முதல் சிதறியவை போல் - மலைத்தலையில் முத்துக்கள் சிதறியவை போல் விளங்கும், யானைப் புகர் முகம் பொருத புது நீர் ஆலி - யானையின் புள்ளியினை யுடைய முகத்தில் மோதி வீழ்ந்த புதிய ஆலங் கட்டி, பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப - பளிங்கினைச் சொரிவது போலப் பாறையில் வீழ்ந்து கோலம் செய்ய, கார் கதம் பட்ட கண் அகல் விசும்பில் - முகில்கள் சினந்தெழுந்தனவாய இடமகன்ற வானில், விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னி - பொறிவிடுகின்ற கொள்ளி போல் ஒழுங்குபட மின்னி, படு மழை பொழிந்த பானாள் கங்குல் - மிக்க மழையைச் சொரிந்த நடு நாளாகிய இரவில், ஆர் உயிர் துப்பின் - அரிய உயிர்ப் பொருளாகிய உணவினை யுடை.ய, கோண்மா வழங்கும் இருளிடை - கொல்லும் தொழிலுடைய விலங்குகள் திரியும் இருளிடையே, அல்கல் தமியள் வருதல் யாவதும் அருளான் - நாடோறும் தனியே வருதலானே சிறிதும் அருள் செய்கின்றா னல்லன்;

க-உ. புணர்ந்தோர் புன்கண் அருளலும் - தம்மைச் சார்ந்தோரது துன்பினைப் போக்கியருளலும், உணர்ந்தோர்க்கு ஒத்தன்று . அறிவுடையார்க்குப் பொருந்தியதாகுமே, மன் - நம் தலைவன் அங்ஙனம் செய்திலன், எவன்கொல் - என்னையோ?

(முடிபு) மலை கிழவோனாகிய நம் தலைவன் பானாட் கங்குல் கோண்மா வழங் கும் இருளிடை அல்கல் தமியன் வருதலானே யாவதும் அருளான் ; புணர்ந் தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு ஒத்தன்று மன்; எவன்கொல்?

(வி-ரை.) புன்கண் அருளலும் - புன் கண்ணை நீக்கி யருளலும் என்க, மன் : ஒழியிசை. வரையிடத்துச் சிதறிய முத்தம் போல் யானை முகத்திற் பொருத ஆலி என்பதும், மஞ்ஞை வெரீஇ அரவின்