பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

களிற்றியானை நிரை

௨௩௫(235)


எ-கரு. மழை என மருண்ட - அதனை மேகம் என மயங்கிய, மம்மர் ஓய் களிறு பல உடன் - மயக்கத்தினையுடைய இளைத்த களிறுகள் பலவும் ஒருங்கே, எடுத்த நோயுடை நெடுங்கை - தூக்கிய வருத்தத்தினையுடைய நீண்ட கைகள், தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் - புகழினைத் திரட்டிக் கூறும் கூத்தரது தூம்பி னைப்போலத் தோன்றி ஒலிக்கும் காட்டிலுள்ள, கேழல் அட்ட கோள் செந்நாய் ஏற்றை - ஆண் பன்றியினைக் கொன்ற தன் இரையினை நன்கு பற்றிக்கொள்ளும் திறனுடைய செந்நாயின் ஏற்றை, கம் என ஈர்ப்ப - விரைவாக அதனை இழுத்திட, குருதி ஆரும் எருவைச் செஞ்செவி - வழியெலாம் ஒழுகிய குருதியினைப் பருகும் பருந்தின் சிவந்த செவிகள், மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட புண்தேர் விளக்கில் தோன்றும் - மிக்க போர்க்களப் பரப்பில் இராப்பொழுதில் கைக்கொண்ட வீரர்களது மருமத்துப் புண்களை ஆராயும் விளக்குக்களைப் போன்று தோன்றும், விண்தோய் பிறங்கல் மலை இறந்தோர் - வானைத் தோயும் விளக்கத்தையுடைய மலையினைக் கடந்து பொருள் ஈட்டச் சென்றோராய நம் தலைவர், .

௩. வருவர் - விரைய வருவர் (எனத் தோழி தலைவியை ஆற்று வித்தாள்).

(முடிபு) தோழி வாழி! உவத்தல் செல்லார், ஏஎச் சொல் நாணி மலையிறந் தோர் வருவர்.

(வி - ரை.) உள்ளாங்கு - உள்ளபடி. ஏஎச் சொல் - பெருமிதத்துடன் கூறும் சொல்லுமாம். அலந்ததலை அலந்தலை யென விகாரப்பட்டது. ஞெமையத்து : அத்து சாரியை. ஓடைக் குன்றத்திற்கு அரசயானையும், ஞெமையத்து வலந்த சிலம்பிக் கூட்டிற்குத் துகிற் கொடியும் உவமம். உண்டற்கு நீரின்றி மெலிந்த களிறு மேலுள்ள 'சிலம்பிக்கூட்டை மேகமென மருண்டு அதில் நீருண்டற்குக் கையை மேலே எடுத்ததென்க. கோடியர் தூம்பின் ஒலியும் யானையின் உயிர்ப்பொலியும் ஒரு தன்மையன என்பது, 1'கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்' என்பதனானும் அறிக. உயிர்க்கும் அத்தம் எனவும், அத்தத்தில் கேழலட்ட ஏற்றை ஈர்ப்ப அதன் குருதியை ஆரும் எருவை எனவும் இயையும். குருதி படிந்த அத்தம் அமர்க்களம் போலாக எருவைச் செஞ்செவி ஆண்டுள்ள விளக்குப் போலத் தோன்றும்.

கம்மென, திசைச்சொல்.

(உ - றை.) சிலம்பிக் கூட்டினை மேகமெனக் கருதும் யானையைக் காணும் தலைவர், தாம் பொருளல்லதனைப் பொருளெனக் கருதியதனை உணர்ந்து விரைய மீள்வர் என்றபடி.




1. மலைபடு. ௬.