உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7களிற்றியானை நிரை௨௧

யாடியோரே' (௧௧௬) எனவும், 'மைந்துமலி களிற்றிற் றலைப்புணை தழீஇ . . . நீர் பெயர்ந்தாடிய' (௨௬௬) எனவும் பின்னரும் வருதல் காண்க. யானை யெனவே பிடியும் அடங்கிற்று. ஆங்கு, அசை. புதல்வன் தாய் என்றது கொண்டு, முதுமை எள்ளல் என்றாள். நெருநல் பரத்தையுடன் புனலாடினவன் இன்று வந்து சுணங்கினையும் கற்பினையும் பாராட்டுதலின் அதனை மாயப் பொய்ம்மொழி யென்றாள். பயிற்றல் - பலகாற் சொல்லல். அ ்து அமைகும் என்பதற்கு நீ செய்கின்ற பரத்தமைக்கு யாம் அமைவேம் என்றுமாம். தில், விழைவின்கண் வந்தது; அசையுமாம். அரில் - தூறு, பிணக்கம். தொல்ல ்து: ஆய்தம் விரித்தல்.

(உ - றை.) “நீர் நாய் வாளைக்குக் காவலாகிய வள்ளையினது நிலையை நெகிழ்த்து, இழிந்த்தாகிய வாளையை நுகர்ந்து, பிரம்பாகிய முதிய தூற்றிலே தங்கினாற்போல, நீயும் பரத்தையர்க்குக் காவலாகிய தாய் முதலாயினாரது நிலைமையை நெகிழ்த்துக் குலமகளி ரல்லாத விலைமகளிரை நுகர்ந்து, முன்பு நுமக்குண்டாகிய எங்கள் பழமையைப் பற்ற ஒரு பயன் கருதாது தங்குதல் மாத்திரத்திற்கு எம்மில்லில் வந்தீரென்றாளாம்.”

(மே - ள்.) 'வைகுறு விடியல்' என்னும் சூத்திர வுரையில் இச் செய்யுளை இத் துறைக்கே காட்டி, இது இளவேனில் வந்தது என்று்ம, 'மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே' என்னும் சூத்திரத்து, புறத்திணையாற் கொண்ட மெய்ப் பெயரிடம் பற்றி அகத்திணைப் பொருள் நிகழவும் பெறும் எனக் கூறி, 'அரி பெய் சிலம்பின்' என்னும் அகப்பாடினுள் தித்தன் எனப் பாட்டுடைத் தலைவன் பெயரும், பிண்ட நெல்லின் என நாடும், உறந்தை என ஊரும், காவிரி யாடினை என யாறுங் கூறிப் பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க என்றும், 'நிகழ்தகை மருங்கின்' என்னும் சூத்திரத்து, 'ஆகவனமுலை. . . சாயினை பயிற்றி' என்பது புலவிக்கண் தலைவன் புகழ்ந்தது என்றும் உரைத்தனர் நச். 'மூப்பே பிணியே' என்னும் சூத்திரத்து 'மாயப் பொய்ம்மொழி. . . தில்ல' என்பதனைத் தன்கட் டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது - என்பதற்கு எடுத்துக் காட்டினர் பேரா.


7. பாலை

[மகட் போக்கிய செவிலித் தாய் சுரத்திடைப் பின்சென்று நவ்விப் பிணாக் கண்டு சொல்லியது.]



முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின
தலைமுடி சான்ற தண்தழை யுடையை
அலமரல் ஆயமொ டியாங்கணும் படாஅல்
மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய


1. தொல். அகத். ௮. 2. தொல். புறத். ௩௨. 3. தொல். பொருள். ௩௪. 4. தொல். மெய். ௬.