உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௦அகநானூறு[பாட்டு

நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு = அவ்விடத்துப் பூழி நாடாரது குளத்தினை நாடிச் சென்று விளையாடும் களிறும் பிடியும் போல முகமலர்ச்சியுற்று, ஏந்து எழில் ஆகத்துப் பூ தார் குழைய = உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மலர்மாலை அழகுகெட, நெருநல் ஆடினை புனலே = நேற்றுப் புனலாடினை;

௧௧-௫. இன்று வந்து = இன்று இங்கு வந்து, ஆகம் வளம் முலை அரும்பிய சுணங்கின் = மார்பிலுள்ள அழகிய முலையில் தோன்றிய தேமலையும், மாசு இல் கற்பின் = குற்றமற்ற கற்பினையுமுடைய, புதல்வன் தாய் என = என் புதல்வன் தாயே என்ற, மாயப் பொய்மொழி சாயினை பயிற்றி = வஞ்சனை பொருந்திய பொய் மொழியினை வணங்கிப் பலகாலும் கூறி, எம் முதுமை எள்ளல் = எம் முதுமை நிலையினை இகழாதேகொள், அ ்து அமைகும் = அம் முதுமைக்கு நாங்கள் அமைவோம்;

௧௬-௨௦.சுடர் பூ தாமரை நீர் முதிர் பழனத்து = தீப்போலும் தாமரைப் பூக்களையுடைய நீர்மிக்க வயலில், அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி = அழகிய உட்டுளையுடைய வள்ளையினது மெல்லிய கொடிகளை உழக்கி, வாளை மேய்ந்த வள் எயிற்று நீர் நாய் = வாளை மீன்களைத் தின்ற கூரிய பற்களையுடைய நீர்நாய், முன் அரைப் பிரம்பின் முது அரில் செறியும் = முட்கள் பொருந்திய தண்டினையுடைய பிரம்பின் பழைய தூறுகளில் தங்கி இருக்கும் (இடங்களையுடைய), பல் வேல் மத்தி கழாஅர் அன்ன = பல வேற்படையினையுடைய மத்தியென்பானது கழாஅர் என்னும் ஊரினை யொத்த,

௨௦-௨௧. எம் இளமை சென்று தவ தொல்ல ்து = எமது இளமை கழிந்து மிகப் பழையதாயிற்று;

௨௨. பொய் மொழி எமக்கு இனிமை எவன் செய்வது = இனி நின் பொய்ம்மொழி எங்கட்கு இனிமை செய்வதென்பது எங்ஙனம் ஆகும்?

(முடிபு) காவிரி நீத்தத்து நெருநல் புனல் ஆடினை; இன்று வந்து, சுணங்கினையும் கற்பினையுமுடைய புதல்வன் தாயெனப் பொய்ம்மொழி பயிற்றி எம் முதுமை எள்ளல்; அ ்து அலமரும்; எம் இளமை சென்று தவத் தொல்லது; நின் பொய்ம்மொழி எமக்கு இனிமை செய்வது என்னை?

சிலம்பினையும் தொடலையினையும் முன்கையினையும் தோளினையுமுடைய ஐயை எனவும், நீர்நாய் மூதரிற் செறியும் கழார் எனவும் இயையும்.

(வி - ரை.) ஐயையது கற்பின் சிறப்பு நோக்கி, ஐயை தந்தை என்றார். மழை வளந் தரூஉம் என்பதற்கு மழையாகிய வளத்தினைத் தரும் எனக் கொண்டு, தித்தனது செங்கோன்மை கூறிற்று எனலுமாம்; மழை வளம் தரும் ஐயை என்றியைத்தலும் பொருந்தும். வேழக் கோலைப் புணையாகக் கொண்டு புனலாடுதல் 'கொடுங்கோல் வேழத்துப் புனைதுணையாகப், புனலாடு கேண்மை' (௧௮௬) எனவும், யானை போலப் புணை தழுவிப் புனலாடுதல், 'தார்பூங் களிற்றிற் றலைப்புணை தழீஇ. . . . காவிரிக்கோடு தோய் மலிர்நிறை