6களிற்றியானை நிரை௧௯
[பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது.]
அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை
அரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை
இழையணி பணைத்தோ ளையை தந்தை
மழைவளந் தரூஉ மாவண் தித்தன்
௫)பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்
குழைமாண் ஒள்ளிழை நீவெய் யோளொடு
வேழ வெண்புணை தழீஇப் பூழியர்
கயநா டியானையின் முகனமர்ந் தாஅங்
௧௦)கேந்தெழில் ஆகத்துப் பூந்தார் குழைய
நெருநல் ஆடினை புனலே இன்றுவந்
தாக வனமுலை யரும்பிய சுணங்கின்
மாசில் கற்பின் புதல்வன் தாயென
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
௧௫)முதுமை யெள்ளல ் தமைகுந் தில்ல
சுடர்பூந் தாமரை நீர்முதிர் பழனத்
தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்
முள்ளரைப் பிரம்பின் முதரிற் செறியும்
௨௦)பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம்
இளமை சென்று தவத்தொல் ல்்தே
இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே.
-பரணர்
(சொ-ள்.) ௧-௬ அரி பெய் சிலம்பின் = பரல்கள் இடப்பெற்ற சிலம்பினையும், ஆம்பல் அம் தொடலை = ஆம்பல் மலராலாகிய அழகிய மாலையினையும், அரம் போழ் அவ்வளை பொலிந்த முன்கை = அரத்தாற் பிளக்கப்பெற்ற அழகிய வளைகளாற் பொலிந்த முன்கையினையும், இழை அணி பணை தோள் = அணிநலன் அணிந்த மூங்கிலையொத்த தோளினையும் உடைய, ஐயை தந்தை = ஐயை என்பாளுக்குத் தந்தையாகிய, மழைவளம் தரும் மாவண் தித்தன் = மழைவளம் போலத் தரும் பெரிய வண்மையையுடைய தித்தனது, பிண்டம் நெல்லின் உறந்தை ஆங்கண் = நெற் குவியல்களையுடைய உறையூராய அவ்விடத்தே, கழை நிலை பெறாக் காவிரி நீத்தம் = ஓடக் கோலும் நிலைத்தலில்லாத காவிரியின் நீர்ப் பெருக்கில்,
௭-௧௧. குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளோ[பிழை]டு = குழை முதலாகிய மாண்புறும் ஒளி பொருந்திய அணிகளையுடைய நின்னால் விரும்பப்பட்ட பரத்தையோடு, வேழம் வெண்புனை தழீஇ = வேழக் கரும்பாலாகிய வெள்ளிய தெப்பத்தினைக் கொண்டு, பூழியர் கயம்