பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௩௮(238)

அகநானூறு

[பாட்டு


விரும்பிச் சூழ்ந்தாற் போல, நீ, எமர் காவலைச் சிதைத்துத் தலைவியை நுகர்ந்தும், மீட்டும் அக்கள வொழுக்கத்தையே விரும்பிப் பகலினும் இர வினும் சூழ்வாரா நின்றாய் என்பது.

(மே - ள்.) 'நாற்றமும் தோற்றமும்' என்னுஞ் சூத்திரத்து, 'ஆற்றது தீமை யறிவுறு கலக்கமும்' என்பதற்கு இப்பாட்டு உதாரணமாகும் என்றும், 2'பொழுது மாறுங் காப்பும்' என்னுஞ் சூத்திரத்து ‘நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும்' என்ற பகுதிக்கு, 'கழிபெருங் காதல ராயி னுஞ் சான்றோர், பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்' எனப் பிறர்மேல் வைத்துத் தலைவனை அறிவு கொளுத்தினமையின் வழுவாய் அமைந்தது என்றும், 'பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்' எனவே, புகழொடு வரூஉம் இன்பம் வெஃகுவரெனக் கொள்ளவைத்தலின், நன்மையும் தீமையும் பிறிதின் மேல் வைத்துக் கூறிற்றாம் என்றும் கூறினர் நச்.

3'கல்வி தறுகண்' என்னுஞ் சூத்திரத்து, 'கழியாக் காதல ராயினுஞ் சான்றோர், பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்' என்பது புகழ் பற்றிப் பிறந்த பெருமிதம்' என்பர் பேரா.



113. பாலை


(தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.)



நன்றல் காலையும் நட்பிற் கோடார்
சென்று வழிப்படூஉந் திரிபில் சூழ்ச்சியில்
புன்றலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
4அமர்வீசு வண்மகிழ் அஃதைப் போற்றிக்
௫) காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர்

இளங்கள் கமழும் நெய்தலம் செறுவின்
வளங்கெழு நன்னா டன்னவென் தோள்மணந்
தழுங்கல் மூதூர் அலரெடுத் தரற்ற
நல்காது துறந்த காதலர் என்றும்
க0) கல்பொரூஉ மெலியாப் 5பாடினோன் அடியன்

6அல்கு வன்சுரைப் பெய்த வல்சியன்
இகந்தன வாயினும் இடம்பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில் -
குவையிமில் விடைய வேற்றா ஒய்யும்
கரு) கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல்

விழவயர்ந் தன்ன கொழும்பல் திற்றி
எழாஅப் பாணன் நன்னாட் டும்பர்
நெறிசெல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்


1. தொல், கள. உக. 2. தொல். பொருளி. க௬. 3. தொல். மெய்ப். ௬. (பாடம்) 4. மாவீசு. 5. பரட்டினோனடி. 6. அகன்கு லஞ்சுரைப் பெய்த வல்சியர். வைக லஞ்சுரைப் பெய்த,