பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



௨௪௪(244)

அகநானூறு

[பாட்டு


க௩-ரு. பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை - பிறையினை யொத்த வெள்ளிய கோட்டினையுடைய பெருமை தங்கிய யானைகளையும், சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி - சினம் மிக்க வலிமையையும் தாவும் குதிரைகளையுமுடைய அஞ்சி என்பான், இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சு வரு கவலை - பகைவரது ஆனினங்களைக் கைப்பற்றி மறைத்திடும் அச்சந் தோன்றும் கவர்த்த நெறிகளிலே,

க௬-௮. நன்னர் ஆய்கவின் தொலைய - நன்றாகிய நமது அழகு தொலைய, நம் நீத்துச் சேய் நாட்டு உறையும் பொருட்பிணி - நம்மைப் பிரிந்து நெடுந் தூரத்திலுள்ள நாட்டில் வதிதற் கேதுவாய பொருளீட்டும் செயல், கூடாமையின் நீடியோர் - உரிய காலத்தினுள் முற்றாமையின் காலம் தாழ்த்திருப்போர் ஆகிய,

௬-எ, நம் காதலர் என்றும் நோயிலர் ஆக - நம் காதலர் என்றும் நோயின்றி இனி திருப்பாராக.

(முடிபு) மூதூரில் வெஞ்சொற் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; என்ஆய் நலம் தொலையினும் தொலைக; எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் முறித்து இடுஉப் பழிச்சிய வணர் மருப்பு அன்ன கொன்றை நெற்று தாஅம் அத்தம் நீளிடை, அஞ்சி இனம் கொண்டொளிக்கும் கவலையில், கவின் தொலைய நீத்துச் சேய் நாட்டுறையும் பொருட்பிணி கூடாமையின் நீடியோர் ஆகிய நம் காதலர் என்றும் நோயிலராக.

(வி - ரை.) பலர் - பலரும்; 'பலர் புகழ் ஞாயிறு' என்புழிப் போல முற்றும்மை தொக்கது. சேரி அம் பெண்டிர் : அம், சாரியை. பாணர் யாழிலே தெய்வம் உறைதல் பற்றியும், தமக்கு உணவளிக்கும் உதவியுடைமைபற்றியும் யாழினைத் தொழுது பரவுவார் எனவும், எவ்வி இறந்தபின் இனித் தம் பாட்டினைக் கேட்டுப் பரிசில் அளிப்பார் இலரென்னும் வருத்த மிகுதியால் யாழினை முறித்துப் போகட்டார் எனவும் கொள்க. மருப்பு அன்னவாக நெற்று அறை மிசைத் தாஅம் என்க. இதனால் பாணர் முறித்துப் போகட்ட மருப்பும் பலவென்பது பெற்றாம். வயமான் அஞ்சி என்பது பாடமாயின், சிங்கம் போலும் வலியுடைய அஞ்சி என்றுரைக்க. யானை சின மிகு முன்பின் வயமான் அஞ்சி இனங் கொண்டொளிக்கும் என்பது பாடமாயின், யானையானது சிங்கத்தைக் கண்டஞ்சி தன் இனத்தைக் கொண்டொளிக்கும் கவலை என்க.

(மே - ள்.) 1'மங்கல மொழியும் வைஇய மொழியும்' என்னுஞ் சூத்திரத்து, 'நோயில ராகநங் காதலர்' எனக் கூறுவது, நம்மை அறனன்றித் துறத்தலின் தீங்கு வருமென்று அஞ்சி வாழ்த்தியது. நம்பொருட்டுத் தீங்கு வருமென நினைத்தலின் வழுவாய் அமைந்தது என்றனர் நச்.




1. தொல். பொருளி, ரு0.