பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

களிற்றியானை நிரை

௨௪௩(243)சேரியம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக -
ரு) நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன்

ஆய்நலம் தொலையினும் தொலைக என்றும்
நோயில ராகநம் காதலர் வாய்வாள்
எவ்வி வீழ்ந்த செருவிற் பாணர்
கைதொழு மரபின்முன் பரித்திடூஉப் பழிச்சிய
க0) வள்ளுயிர் வணர்மருப் பன்ன ஒள்ளிணர்ச்

சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்தம் நீளிடைப்
பிறைமருள் வான்கோட் டண்ணல் யானைச்
சினமிகு முன்பின் 1வாமான் அஞ்சி ,
கரு) இனங்கொண் டொளிக்கும் அஞ்சுவரு கவலை '

நன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டு
நந்நீத் துறையும் பொருட்பிணிக்
கூடா மையின் நீடி யோரே.

--மாமூலனார்.

(சொ - ள்.) (தோழி!)

க-௪. அழியா விழவின் அஞ்சு வரும் மூதூர் - என்றும் நீங்காத விழாவினையுடைய பகைவர்க்கு அச்சம் தரும் இம் முதிய ஊரின் கண்ணே , பலர் - பலரையும், பழியிலராயினும் - அவர் பழியொன்றும் இலராயினும், புறங்கூறும் அம்பல் ஒழுக்கமும் - புறஞ்சொற் கூறுதலாகிய அம்பல் ஒழுக்கத்தினையும், ஆகிய வெம் சொல் - வெவ்விய சொல்லையும் உடையராகிய, சேரி பெண்டிர் எள்ளினும் எள்ளுக- சேரிப் பெண்டிர் நம்மை இகழினும் இகழுக ;

ரு-௬. நுண் பூண் எருமை குட நாடு அன்ன - நுண்ணிய தொழிற்பாடமைந்த பூணினையுடைய எருமை யென்பானது குட நாட்டினை யொத்த, என் ஆய் நலம் தொலையினும் தொலைக - எனது அழகிய நலம் தொலையினும் தொலைவதாக;

எ-கஉ. வாய் வாள் எவ்வி வீழ்ந்த செருவில் - தப்பாத வாட் படையினையுடைய எவ்வி என்பான் வீழ்ந்த போர்க்களத்தே, பாணர் - பாணர்கள், கைதொழு மரபின் - கையாற்றொழும் முறைமையொடு, முன் பழிச்சிய - முன்பெல்லாம் பராவிய (யாழின்), வள் உயிர் வணர் மருப்பு - வளம் பொருந்திய ஒலியையுடைய வளைந்த கோட்டினை, பரித்து இடூஉ அன்ன - ஒடித்துப் போகட்டால் ஒத்த, ஒள் இணர் சுடர் பூ கொன்றை - ஒளி பொருந்திய கொத்துக்களை யுடைய சுடரும் பூக்களையுடைய கொன்றையினது, ஊழ் உறு விளை நெற்று - முறையாக முற்றி விளைந்த நெற்றுக்கள், அறை மிசைத் தாஅம் அத்தம் நீள் இடை - பாறை மீது பரந்து கிடக்கும் சுரத்தின் நீண்ட நெறியிலுள்ள,


(பாடம்) 1. வயமானஞ்சி.