உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

களிற்றியானை நிரை

௨௪௯(249)


தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகிற் றூங்கும் சிறுகுடிப் பாக்கத்து
ரு) 1இயன்முரு கொப்பினை வயநாய் பிற்படப்

பகல்வரிற் கவ்வை அஞ்சுதும், இகல்கொள
இரும்பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப்
பெருங்கை 2யானைக் கோள்பிழைத் திரீஇய
அடுபுலி வழங்கும் ஆரிருள் நடுநாள்
க0) தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்,

என்னா குவள்கொல் தானே பன்னாள் -
புணர்குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளிகடி பாடலும் ஒழிந்தனள்
அளியள் தானின் அளியல திலளே.

- கபிலர்.


(சொ - ள்.) க-ச௬. கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக்கவாஅன் - ஒலிக்கும் வெள்ளிய அருவிகள் விளங்கும் மலையின் சாரற்கண்ணே , தேம் கமழ் இணர வேங்கை சூடி - தேன் கமழும் கொத்துக்களை யுடைய வேங்கைப் பூக்களைச்சூடி, தொண்டகப் பறைச்சீர் - தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கிசைய, பெண்டிரொடு விரைஇ - ஆடவர் பெண்டிரொடு கலந்து, மறுகில் தூங்கும் சிறுகுடிப்பாக்கத்து - தெருக்களில் ஆடும் எமது சிறுகுடிப் பாக்கத்தின் கண்ணே , இயல் முருகு ஒப்பினை - இயங்கும் முருகனை ஒப்பாயாகி, வயநாய் பிற்படப் பகல்வரின் - வலிய நாய் பின்னே வரப் பகற்கண் நீ வரின், கவ்வை அஞ்சுதும் - ஊரார் கூறும் அலர்க்கு அஞ்சுகின்றோம் ;

௬-௧௦. இரும்பிடி கன்றொடு விரைஇய - கரிய பிடியோடும் கன் றோடுங் கூடிய, கயவாய் பெருங்கை யானைக் கோள் பிழைத்து - அகன்ற வாயினையும் நீண்ட கையினையுமுடைய யானையைக் கொள் ளுதல் பிழைத்து, இகல்கொள இரீஇய - அதனால் அவற்றைப் பகைமை பொருந்த மறைந்திருக்கும்படி செய்த, அடுபுலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் - கொல்லும் புலி திரியும் அரிய இருள் சூழ்ந்த நள்ளிரவில், தனியை வருதல் அதனினும் அஞ்சுதும் - நீ தனியையாகி வருதலை அதனைக் காட்டினும் அஞ்சுகின்றோம் ;

கக--௪. பன்னாள் புணர்குறி செய்த புலர்குரல் ஏனல் - பல நாளும் புணரும் பகற்குறியாகக் கொண்ட முற்றிய கதிரையுடைய தினைப்புனத்திலே, கிளி கடி பாடலும் ஒழிந்தனள் - கிளியை ஓட்டு தற்குப் பாடும் பாடலும் நீங்கினள்; என் ஆகுவள் கொல் - இனி என் ஆகுவளோ, அளியள் நின் அளி அலது இலளே - இரங்கத் தக்காளாய என் தோழி நின் அருளையன்றி பிறிதொரு பற்றுக் கோடும் இலள்.

(முடிபு) தலைவ, சிறுகுடிப் பாக்கத்து இயல் முருகு ஒப்பினை பகல்வரின் கவ்வை அஞ்சுதும் ; அடுபுலி வழங்கும் ஆரிருள் நடு நாள் தனியை வருதல்


(பாடம்) 1. இகல்முருகு. 2. யானை கோட்பிழைத்து.