பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௫௦(250)

அகநானூறு

[பாட்டு


அதனினும் அஞ்சுதும்; இவள், ஏனல் கிளிகடி பாடலும் ஒழிந்தனள் ; என் ஆகுவள் கொல் ? அளியள் நின் அளியலது இலள்.

(வி - ரை.) அருவிப் பிறங்குமலை என்பது பாடமாயின் அரு வியையுடைய விளங்கும் மலை யென்க. இகல் முருகு என்பது பாட மாயின், பகைவரொடு மாறுபாடு கொண்ட முருகன் என்க. மிகல் கொள எனப் பிரித்து, தருக்கு அமைய என்றுரைத்தலுமாம். இரீஇய - ஓடும்படி செய்த என்றுமாம். யானை கோட் பிழைத்து என்பது பாடமாயின், யானையானது கொள்ளுதல் பிழைத்து இரீஇய என்க. வழங்கும் ஆறிருள் நடுநாள் என்பது பாடமாகக் கொள்ளின் - வழங்கும் நெறியின்கண் இருளையுடைய நடுநாள் என்க.

பகல்வரிற் கவ்வை யஞ்சுதும் என்றதனாலே பகற்குறி விலக்கியும், ஆரிருள் நடுநாள் வருதல் அஞ்சுதும் என்றதனால் இரவுக்குறி விலக்கியும், ஏனல் கிளிகடி பாடலும் ஒழிந்தனள் என்றதனால் செறிப்பறிவுறுத்தியும், நின் அளியலதிலள் என்றதனால் வரைந்து கொள்ளல் வேண்டும் என்றாளாம்.

(மே-ள்.) 1'பொழுது மாறும்' என்ற சூத்திரத்துப் 'பகல் வாரல்' என்றதற்குப் பகல்வரிற் கவ்வை யஞ்சுதும்' என்பதனை எடுத்துக் காட்டினர் நச்.



119. பாலை


(செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது. தோழி தலை மகட்குச் சொற்றதூஉமாம்.)



நுதலுந் தோளுந் திதலை யல்குலும்
வண்ணமும் வனப்பும் வரியும் வாட
வருந்துவள் இவளெனத் திருந்துபு நோக்கி
வரைவுநன் றென்னா தகலினும் அவர்வறிது
௫) ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை

ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப .
நெறியயல் திரங்கும் அத்தம் வெறிகொள
உமண்சாத் திறந்த ஒழிகல் அடுப்பின் -
நோன்சிலை மழவர், ஊன்புழுக் கயரும்
க௦) சுரன்வழக் கற்ற தென்னா துரஞ்சிறந்து -

நெய்தல் உருவின் ஐதிலங் ககலிலைத்
தொடையமை பீலிப் பொலிந்த கடிகை
மடையமை திண்சுரை மாக்காழ் வேலொடு
தணியமர் அழுவம் தம்மொடு துணைப்பத்
கரு) துணிகுவர் கொல்லோ தாமே 2துணிகொள

மறப்புலி உழந்த வசிபடு சென்னி


1. தொல். பொருளி. க௬. (பாடம்) 2. துனிகொள, துணிகொள்பு.