உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110]

களிற்றியானை நிரை

௨௫௧௧௧(251)



உறுநோய் வருத்தமொ டுணீஇய மண்டிப்
படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
கைதோய்த் துயிர்க்கும் வறுஞ்சுனை
௨௦) மைதோய் சிமைய மலைமுத லாறே.

- குடவாயிற் கீரத்தனார்.



(சொ - ள்.) க-௪. (தோழி! ) அவர் - நம் தலைவர், வரைவு நன்று என்னாது அகலினும் - வரைந்து கோடல் தக்கது என்னாது பிரிந்திடினும், நுதலும் தோளும் திதலை அல்குலும் வண்ணமும் வனப்பும் வரியும் வாட - நெற்றியும் தோளும் தேமலை யுடைய அல்குலும் நிறமும் அழகும் வரியும் வாட, வருந்துவள் இவள் எனத் திருந்துபு நோக்கி - இவள் வருந்துவாள் என நன்கு ஆராய்ந்துணர்ந்து,

க௫-௨௦. மறப்புலி உழந்த துணி கொள வசிபடு சென்னி - மறத்தையுடைய புலியுடன் பொருது உழந்தமையால் துண்டமாகப் பிளவுபட்ட சென்னியின்கண், உறு நோய் வருத்தமொடு - உற்ற நோயாலாய வருத்தத்துடன், உணீஇய மண்டி - நீர் உண்டற்கு விரைந்து சென்று, படி முழம் ஊன்றிய நெடு நல் யானை - மணணில் முழங்காலை மடித்தூன்றிய நெடிய நல்ல யானையானது, கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை - தனது கையால் தோய்த்தும் நீரின்மையால் பெருமூச் செறியும் வறிய சுனையினையுடைய, மை தோய் சிமைய மலை முதல் ஆறு - மேகம் படியும் உச்சியினை யடைய மலையிடத்துச் செல்லும் நெறியாய,

௪--எ. ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை - நெறியிற் செல்லும் மக்கள் அறுத்துப் போகட்ட பிரண்டைக் கொடி, ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப - இடியாற் றாக்குதல் பெற்ற பாம்பினது பசிய துண்டு போல, நெறி அயல் வறிது திரங்கும் அத்தம் - வழியின் பக்கத்தே பயனின்றி வதங்கிக் கிடக்கும் காட்டில்,

எ-க0. உமண் சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில் - உப்பு வணிகர் கூட்டம் விட்டொழிந்த கல் அடுப்பில், கோன் சிலை மழவர் - வலிய வில்லையுடைய மழவர், வெறி கொள் ஊன் புழுக்கு அயரும் சுரன் - நாற்றமுண்டாக ஊனைப் புழுக்கி யுண்ணும் இடங்களை யுடைய சுரமானது, வழக்கு அற்றது என்னாது - பெண்டிரொடு இயங்குதற்கு உரியதல்லது என்று நினையாது,

க0-ரு. உரம் சிறந்து - ஊக்கம் மிக்கு, நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை - நெய்தற் பூப்போலும் உருவினை யுடைய அழகி தாக விளங்கும் அகன்ற இலையினையும், தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை - தொடுத்தல் அமைந்த மயிற்றோகையால் விளக்க முற்ற காம்பினையும், மடை அமை திண் சுரை - மூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும், மா காழ் வேலொடு - கரிய தண்டினையு முடைய வேலே துணையாக, தணி அமர் அழுவம் - பகையைத்