பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௦களிற்றியானை நிரை[பாட்டு

 

தின் நெறியினை நீவிர் முன்பு அறிதலும் செய்வீரோ என்று பரிவுற்று வினவுவாரைப் பெறின்,

௫. அரிய அல்ல மன் = நமக்கு அரியன அல்லவாம்; (அந்தோ அது பெற்றிலோமே!)

(முடிபு) இகுளை! அவர் நாட்டு மென்மெல ஒதுங்கிப் பானாட்கங்குலும் (செல்லல்), வினவுவார்ப் பெறின், அரிய அல்ல மன்.

ஏற்றை ஈர்க்கும் ஆங்கண் அசும்பில் படுகளிறு என்க.


(வி - ரை.) ‘ஏற்றை’ என்பது, 1“ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம், ஏற்றைக் கிளவி யுரித்தென மொழிப” என்பதனால், கரடி புலி முதலியவற்றின் ஆணினைக் குறிப்பதொரு மரபுப் பெயராகும். துதி - உறை. புலர என்ற பாடங்கொண்டு புலால் நாற எனலுமாம். அறிதலு மறிதிரோ - இங்ஙனம் வினை யிரட்டிக்குங்கால், பின்னது ‘செய்தல்’ என்னும் பொதுவினையாகக் கொள்ளப்படும். 2‘அறிதலும் அறிதியோ பாக’ என்பதும் காண்க. பிறங்கல், பிறங்குதல் என்பதன் விகாரமுமாம். மின்னுவிட - மின் வழிவிட, ஒதுங்கி - ஒதுங்க எனத் திரித்தலுமாம். மணியேர் ஐம்பால் ஏர், உவம உருபுமாம்.

(உ - றை.) ‘ஈயற்புற்றத்து. . . மதனழியும்’ என்பதற்கு, “ஏற்றையானது பாம்பை வருத்தவேண்டும் என்னும் கருத்தில்லையாயினும், அது தன் காரியம் செய்யவே வள்ளுகிர் படுதலாகிய அவ்வளவிற்குப் பாம்பு வலியழிந்தாற்போல, அவர் நம்மை வருத்தவேண்டும் என்னும் கருத்தில்லை யாயிருக்கவே, தமது காரியமாகிய களவின்பத்திலே ஒழுகவே, ஆறின்னாமை ஊறின்னாமை முதலாகிய இவ்வளவிற்கே நாம் வருந்தும்படியாய் விட்டது” என்றும், ‘பெரிய கேழலட்ட. . .புலரவீர்க்கும்’ என்பதற்கு, “புலியானது தான் நுகர்தற்பொருட்டு வந்து நம்மைக் கூடி, அக் கூட்டத்தாலே புகழ்ச்சியை யுடைத்தாகிய நம் குடியை இகழ்ச்சி யுடைத்தாம்படி பண்ணினார்” என்றும், ‘வழையொடு. . .விடரகத் தியம்பும்’ என்பதற்கு, “வாழை நுகர வந்த யானை அதன் அயலாகிய அசும்பின் குழியிலே விழுந்ததாகப், பின்பு அக் குழியினின்றும் ஏறமாட்டாது வாழையாகிய உணவையும் இழந்துழிப், பிடி அது ஏறுதற்குப் படியாக மரம் முறிக்கின்ற ஓசை விண்டோய் விடரகத்து இயம்பினாற் போல, அவரும் நமது நலம் நுகர வந்து களவொழுக்கமாகிய குழியிலே விழுந்து, இக் களவொழுக்கமாகிய இதனை விட்டு வரையுவு மாட்டாது, நமது காவலருமையால் இக் களவொழுக்கினை நுகரவுமாட்டாது துயரப்படுகின்றவழி, அறத்தொடுநிலை முதலாகிய இவற்றால் மகளிராகிய நாமே வரைய முயலும் வழி, அம் முயற்சியானே ஊரெல்லாம் அறியும்படி பண்ணினார்” என்றும் கூறுவர் குறிப்புரைகாரர்.


1. தொல். மரபு. ௪௯. 2. நற். ௧௦௬.