21
களிற்றியானை நிரை
௫௧
கொடுங்கழி தாழை வீழ்கயிற்று ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த ஊசல் தூங்கி - வளைந்த கழியிலுள்ள தாழை விழுதாலாய கயிற்றால் புலிநகக் கொன்றையின் உயர்ந்த கிளையில் கட்டித்தொங்கவிட்ட ஊசலில் ஆடியும், கொண்டல் இடுமணல் குரவை முனையின் - கீழ்க்காற் றுக் குவித்த மணலில் குரவையாடி(யும் இவை) வெறுப்பின், வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி - வெள்ளிய தலையையுடைய கடல் நீரில் ஆயத்தாரோடு விளையாடி, மணி பூ பைந்தழை அணித்தக தைஇ - அழகிய பூக்களோடு மேவிய பசிய தழை யுடையினை அழகு பொருந்த உடுத்திக் கொண்டும், பல் பூ கானல் அல்கினம் வருதல் - (இங்ஙன மெல்லாம்) பல பூக்களையும் உடைய கடற்கரைச் சோலையில் நாம் தலைவரொடு தங்கி வருதலைப்பற்றி,
கக-சு. இவ்வூர் - இவ்வூரில், கவ்வை நல் அணங்கு உற்ற - அலர் கூறலாகிய நற்பேய் பிடித்திருக்கும், கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு - கொடுமை கூறலே அறியும் பெண்டிர் கூறும் சொல்லைக் கேட்டு, அன்னை - நமது அன்னை, பெரும் துறை - பெரிய துறையகத்து, எல்லையும் இரவும் என்னாது - பகலும் இரவும் என் றில்லாது, வலவன் ஆய்ந்த வண்பரி - பாகன் ஆய்ந்து கொண்ட அழகுமிக்க குதிரை பூட்டப்பெற்று, நிலவு மணல் கல் என கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே - நிலாப்போன்ற மணலில் கல் லென்னும் ஒலியுடன் சுழன்று திரியும் ஒரு தேர் உண்டு என்று எண்ணி, கடிகொண்டனள் - இல்லின்கண் காவற்படுத்தினள்; (என் செய்வாம்.)
(முடிபு) தோழி, நாம் பல் பூங்கானல் தலைவனொடு அசைஇ, ஓப்பிக், கெண்டித், தூங்கி, ஆடி, முனையின் தைஇ, அல்கினம் வருதலை(ப் பற்றி) அன்னை பெண்டிர் கூறும் சொற்கொண்டு பெருந்துறையிடத்துக் கொட்கும் தேர் உண்டு எனவே நம்மைக் கடிகொண்டனள்; (என் செய்வாம்.)
(வி - ரை.) கொழுமீன் - ஒருவகை மீனுமாம். குரவையை வெறுப் பின் புணரி யாடியும் என்றுமாம். அணங்கு - ஈண்டுப் பேய்; நல் அணங்கு என்றது இகழ்ச்சிக் குறிப்பு.
(மே-ள்.) 1‘மறைந்தவற் காண்டல்' என்னுஞ் சூத்திரத்து, பிறர் கூற்றால் தமர் தற்காத்தமைக்கு இச் செய்யுளையும், 2'தேரும் யானையும்' என்னுஞ் சூத்திரத்து, தலைவன் தேரூர்ந்து வருதற்கு, 'நிலவு மணற் கொட்கு மோர் தேருண்டெனவே' என்பதனையும் எடுத்துக் காட்டினர் நச்.
[பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச்சுரத்து நின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது.]
மனையிள நொச்சி மௌவல் வான்முகைத்
துணைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்
1, தொல். கள. ௨௦. 2. தொல். பொருளியல். க௮.