௫௨
அகநானூறு
[பாட்டு
அவ்வயிற் றகன்ற அல்குல் தைஇத்
தாழ்மென் கூந்தல் தடமென் பணைத்தோள்
ரு) மடந்தை மாணலம் புலம்பச் சேய்நாட்டுச்
செல்லல் என்றியான் சொல்லவும் ஒல்லாய்
வினை நயந் தமைந்தனை ஆயின் மனை நகப்
பல்வேறு வெறுக்கை தருகம் வல்லே
எழுவினி வாழியென் நெஞ்சே புரியிணர்
க0) மெல்லவிழ் அஞ்சினை புலம்ப வல்லோன்
கோடறை கொம்பின் வீயுகத் தீண்டி
மராஅ மலைத்த மணவாய்த் தென்றல்
சுரஞ்செல் மள்ளர் சுரியல் தூற்றும்
என்றூழ் நின்ற புன்தலை வைப்பிற்
௧௫) பருந்திளைப் படூஉம் பாறுதலை ஓமை
இருங்கல் விடரகத் தீன்றிளைப் பட்ட
மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பைங்கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க
இரியற் பிணவல் தீண்டலின் பரீ இச்
௨௦)செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின்
பரல்மண் சுவல முரணிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சிக் கூழார் கூவலர்
ஊறா திட்ட உவலைக் கூவல்
வெண்கோடு நயந்த அன்பில் கானவர்
உரு) இகழ்ந்தியங் கியவின் அகழ்ந்த குழிசெத்
திருங்களிற் றினநிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விலங்கிய காடே.
- காவன் முல்லைப் பூதனார்.
(சொ - ள்.) க-சு. மனை இள நொச்சி - மனைப் படப்பையில் உ.ள்ள இளைய நொச்சியிற் படர்ந்த, மா வீழ் மௌவல் வால்முகை - வண்டுகள் விரும்பும் முல்லையின் வெள்ளிய அரும்புகளில், துணை நிரைத்தன்ன - ஒத்தனவற்றை நிரைத்து வைத்தாலொத்த, வெண் பல் - வெள்ளிய பற்களையும், அவ்வயிற்று - அழகிய வயிற்றினையும், அகன்ற அல்குல் - பரந்த அல்குலினையும், தை இ தாழ் மெல் கூந் தல் - ஒப்பனை செய்யப்பெற்றுத் தாழ்ந்து தொங்கும் மெல்லிய கூந்தலினையும், தட மெல் பணைத் தோள் - பெரிய மென்மை வாய்ந்த மூங்கிலையொத்த தோளினையும் (உடைய), மடந்தை மாண் நலம் புலம்ப - நம் தலைவியின் மாண்புறும் அழகு கெட, சேய் நாட்டுச் செல்லல் என்று - சேய்மைக் கண்ணதாகிய நாட்டிற்குச் செல்லாதே என்று, யான் சொல்லவும் ஒல்லாய் - அவ்விடத்தே யான் கூறவும் அதற்குப் பொருந்தாயாய்,
எ-௯. வினை நயந்து அமைந்தனை யாயின் -அவ் வினை யை விரும்பி அமைந்து போந்தா யாகலின், மனை நக பல்வேறு வெறுக்கை தரு