22
களிற்றியானை நிரை
௫௫
சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக்
களிற்றிரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
கரு) ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல
நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத்
தன்னசை உள்ளத்து நந்நசை வாய்ப்ப
இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து
நக்கனென் அல்லனோ யானே எய்த்த
உ௦) நோய்தணி காதலர் வரவீண்
டேதில் வேலற் குலந்தமை கண்டே.
---வெறிபாடிய காமக் கண்ணியார்.
(சொ - ள்.) க-௪. அணங்குடை நெடுவரை உச்சியின் இழி தரும் கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன் - தெய்வமுடைய நீண்ட மலையுச்சியினின்று விழும் கூட்டமாய அருவிகளையுடைய காடு பொருந்திய நாட்டையுடைய நம் தலைவனது, மணம் கமழ் வியன் மார்பு அணங்கிய செல்லல் இது என அறியா மறுவரல் பொழுதில் - மணம் கமழும் அகன்ற மார்பு வருத்திய வருத்தத்தை இதனாலுண்டாயதென்று அறியாத கலக்கமுற்ற காலத்தே,
ரு - கக. படியோர்த் தேய்த்த பல்புகழ் தடக்கை நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என - வணங்காரைத் தேய்த்தொழித்த பலவகைப் புகழ்களைக் கொண்ட பெரிய கையினையுடைய நெடுவேளைப் போற்றின் இவள் துயர் தணியப் பெறுகுவள் என்று, முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற - அறிவு வாய்த்தலையுடைய பெண்டிர் அதனை மெய்யாகக் கூற, களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி - வெறியாடுங் களம் நன்கு அமைத்து (வேலிற்குக்) கண்ணி சூட்டி, வளநகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து - வளம் பொருந்திய கோயிலில் ஒலியுண்டாகப் பாடிப் பலிகொடுத்து, உருவச் செந்தினை குருதியொடு தூஉய் - அழகிய செந்தினையைக் குருதியுடன் கலந்து தூவி, முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள் - முருகனை வரவழைத்த அச்சம் பொருந்திய நடு இரவில்,
கஉ-உக. ஆரம் நாற - சந்தனம் மணம் வீச, சாரல் அருவிடர்த் ததைந்த பல்பூ வண்டுபடச் சூடி - பக்க மலையில் உள்ள அரிய முழைஞ்சுகளிற் செறிந்த பல பூக்களை வண்டு மொய்த்திடச் சூடியும், களிற்று இரை தெரீ இய பார்வல் ஒதுக்கின் ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல - களிறாகிய இரையைத் தெரிதற் பொருட்டு ஒதுங்கிய பார்வையொடு மறைந்து இயங்கும் இயல்பினை யுடைய வலிய புலியினைப்போல, நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை - நமது நல்ல மனையின் கண்ணுள்ள நெடிய இல்லின் காவலாளரும் அறியாவண்ணம், எய்த்த நோய்தணி காதலர் வர - நாம் மெலிதற்கு ஏதுவாய இந் நோயைத் தணித்தற்குரிய நம் காதலர் வந்து, தன் நசை நம் உள்ளத்து நசை வாய்ப்ப - தன்னை நச்சுதலை யுடைய நம் உள்ளத்தின் விருப்பம் நிறைவேறும்படி, இன் உயிர்