பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

களிற்றியானை நிரை


கின்றானல்ல னென்பதுஞ் சொல்லி, அவன் தலைமைக்கேற்ற உவமையாதலின் அது பொருட்டோற்றமாயிற்று எனவும் கூறினர் பேரா.

 

 
23. பாலை
 

[தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]

 


மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல்
பாடுலந் தன்றே பறைக்குரல் எழிலி
புதன்மிசைத் தளவின் இதன்முட் செந்நனை
நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்குபிணி அவிழக்

ரு) காடே கம்மென் றன்றே யவல
கோடுடைந் தன்ன கோடற் பைம்பயிர்ப்
பதவின் பாவை முனைஇ மதவுநடை
அண்ணல் இரலை அமர்பிணை தழீஇத்
தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டனவே

க0) அனைய கொல்வாழி தோழி மனைய
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மாச்சினை காட்டி
அவ்வள வென்றார் ஆண்டுச்செய் பொருளே.

--ஒரோ டோகத்துக் கந்த ரத்தனார்.


(சொ - ள்.) க0. தோழி வாழி -,

க-உ. பறை குரல் எழிலி - முழவின் குரல் போன்ற ஒலியினை யுடைய மேகம், மண்கண் குளிர்ப்ப - மண்ணினிடமெல்லாம் குளிர, தண்பெயல் வீசி - குளிர்ந்த மழையைப் பெய்து, பாடு உலந்தன்றே - ஒலி யடங்கிற்று ;

௩--ரு. புதல் மிசை தளவின் இதல் முள் செந் நனை - புதரின் மீது படர்ந்த செம் முல்லையினது சிவல் முள்ளைப் போன்ற சிவந்த அரும்பு, நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ - நெருங்கிய குலையினை யுடைய பிடாவின் (அரும்புடன்) ஒருங்கு பிணிப்பு விரிந்து மலர, காடு கம் என்றன்றே - காடு கம்மென்று மணம் வீசுகின்றது;

ரு--௯. அவல கோடு உடைந்தன்ன கோடல் பைம் பயிர் - பள்ளங்களிலுள்ள சங்கு உடைந்தாற்போன்ற வெண் கோடலது பசிய பயிரோடு, பதவின் பாவை முனைஇ- அறுகங் கிழங்கைத் தின்று தெவிட்டுதலின் வெறுத்து, மதவு நடை அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ-செருக்கிய நடையினை யும் தலைமையினையுமுடைய ஆண் மான் விரும்பிய பெண்மானைத் தழுவி, தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே - குளிர்ந்த நீரைப் பருகி ஓரிடத்தே சேர்ந்து தங்கிவிட்டன;