பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௫௮

அகநானூறு

[பாட்டு


௧௦-௩. மனைய தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் மௌவல் மாச்சினை காட்டி - மனையிடத்துள்ள முல்லை சூழ்ந்து மலரும் இடமா கிய குறிய நொச்சியது கரிய சினையைக் காட்டி, ஆண்டுச் செய் பொருள் - தாம் வேற்று நாட்டிருந்து பொருள் ஈட்டுங் காலத் தெல்லை, அ அளவு என்றார் - அம் மௌவல் பூக்கத் தொடங்கும் அக் காலத்தெல்லையே என்றாரன்றே, அனைய கொல் - இக்காலம் அவ் வளவிற்றோ, அதனைத் தாண்டி நிற்பதொன்றோ கூறுவாயாக!

(முடிபு) தோழி வாழி, எழிலி மண் குளிர்ப்பப் பெயல் வீசிப் பாடு உலந் தன்று; தளவின் நனை பிடவமொடு பிணி யவிழக் காடு கம்மென்றன்று; இரலை பிணை தழீஇத் தண்ணறல் பருகித் தாழ்ந்து பட்டன; மௌவல் சூழ்வன மலரும் நொச்சி மாச் சினைகாட்டி, ஆண்டுச் செய்பொருள் அவ்வளவென்றார்; அனைய கொல்!

(வி - ரை.) இதல் - சிவல்; கவுதாரியுமாம். கம் - மணங்கமழ் குறிப்பு. அறுகு, இஞ்சி முதலியவற்றின் கிழங்கைப் பாவை என்றல் மரபு; 1'செய்யாப் பாவை' என்புழி, இஞ்சிக்கிழங்கைப் பாவை என் றல் மரபென நச்சினார்க்கினியர் கூறியதுங் காண்க. கோடற் பைம் பயிர் . கோடலைக் களையாகவுடைய வரகு முதலிய பயிர்களுமாம். அனைய கொல் என்பதற்கு (தலைவன் குறித்த காலங் கடந்தமை கூறுவாளாய்,) பொருள் அங்ஙனம் சிறந்த தொன்றோ என்றாள் எனலுமாம்.

(மே - ள்.) 2'ஏனைப் பிரிவும் அவ்வயி னிலையும்' என்னும் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது பொருட் பிரிவின்கண் கார்குறித்து (வருவலென்றமையின்) ஆறு திங்கள் இடையிட்டது என்று கூறினர் நச்.


 
24. முல்லை
 

[(1) தலைமகன் பருவங்கண்டு சொல்லியது. (2) வினைமுற்றும் தலை மகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉமாம்.]

 


வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளை3களைந் தொழிந்த கொழுந்தி னன்ன
தளைபிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை
சிதரலந் துவலை தூவலின் மலருந்

ரு) தைஇ நின்ற தண்பெயற் கடைநாள்
வயங்குகதிர் கரந்த வாடை வைகறை
விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி
மங்குல் மாமழை தென்புலம் படரும்
பனியிருங் கங்குலுந் தமியள் நீந்தித்

க0) தம்மூ ரோளே நன்னுதல் யாமே


1. மலைபடு. கஉ௫. 2. தொல். கற்பு. சக. (பாடம்) 3. களைந் தொழித்த.