பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௬௦

அகநானூறு

[பாட்டு

 உள்ளிடாத, வாள் உடை எறுழ்த் தோள் - வாளினைக் கோத்த வலிய தோளினை யுடையவனும், இரவுத் துயில் மடிந்த தானை - இரவில் அயர்ந்து தூங்கும் சேனைகளைக் கொண்டவனுமாகிய, உரவு சின வேந்தன் பாசறையேம் - மிக்க சினம் பொருந்திய வேந்தனது பாசறையின் கண் உள்ளேம்; (என் செய்வாம்).

(முடிபு) பகன்றை தூவலின் மலரும் தை நின்ற கடைநாள் வைகறை மழை தென்புலம் படரும் கங்குலும் நன்னுதல் தமியள் நீந்தித் தம் ஊரான் ; யாம், யானை மணியோசையும் கணையுதைப்பின் ஓசையும் முரசமொடு முழங்கும் யாமத்துத் தோளினையும் தானையையு முடைய வேந்தன் பாசறையேம் (என் செய்வாம்).

(வி-ரை.) வேளாப் பார்ப்பான் வாளரம் துமித்த வளை என்றமை யால், வேள்வி செய்யாமையான் தாழ்நிலை யடைந்த பார்ப்பனர்க்குச் சங்கறுக்கை முதலிய தொழில்கள் உளவென்பது பெறப்பட்டது. கொழுந்து - சங்கின் தலை; தண் பெயல் நின்ற தை கடைநாள் என மாறுக. கங்குலும், உம்மை சிறப்பு. 'விசும்புரிவது போல்' என இவ் வாசிரியர் உவமம் கூறியது பாராட்டற்குரியது; இஃது இல் பொருளுவமை. வாளுடை வேந்தன் எனவும், தோளையும் தானையையும் உடைய வேந்தன் எனவும் கூட்டுதலும் ஆம். இரவுத் துயில் மடிந்த தானை என்ற து, பலநாளும் துயிலின்றிப் போர் செய்து. வினை முற்றுங் காலை துயின்ற தானை என்றபடி. குறித்த பருவம் வந்தும் சென்று தலைவியைக் கூடாது ஈண்டு இருக்கின்றேமே எனத் தலைவன் இரங்கிக் கூறினானாம்.

(மே-ள்.) 1'கிழவி நிலையே' என்னும் சூத்திரத்து, தலைமகன் பாசறைக் கண்கிழவி நிலையுரைத்துப் புலம்பல், வென்றிக் காலத்தே விளங்கித் தோன்றும் என்பதற்கும், 2'வேந்துறு தொழிலே' என்னுஞ் சூத்திரத்து பகைவயிற் பிரிவு யாண்டினதகம் ஆம் என்பதற்கும் இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் நச்.

 
25. பாலை
 

[பருவங் கண்டழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.]


நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய்
அவிரறல் கொண்ட விரவுமணல் அகன்துறைத்
தண்கயம் நண்ணிய பொழில்தொறுங் காஞ்சிப்
பைந்தா தணிந்த போதுமலி எக்கர்

ரு) வதுவை நாற்றம் புதுவது கஞல
மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில்
படுநா விளியா னடுநின் றல்கலும்
உரைப்ப போல ஊழ்கொள்பு கூவ
இனச்சிதர் உகுத்த இலவத் தாங்கண்


 

1. தொல், கற்பு. சரு. 2. தொல், கற்பு. ௪௮.