பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



௬௪

அகநானூறு

[பாட்டு


தேமலை யணிந்த இனிமைகொண்ட மெல்லிய முலைகள், நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் - அவரது நறிய சந்தனம் அணியப் பெற்ற நன்னிறம் விளங்கும் மார்பில், வீங்க முயங்கல் யாம் வேண் டினம்- விம்ம முயங்கு தலை யாம் விரும்பினேம் ஆகவும், தீம்பால் படு தல் தாம் அஞ்சினரே - தமது மார்பில் இனிய பால் படுதலை அவர் அஞ்சினர் ;

க௬-உக. ஆயிடை கவவு கை நெகிழ்ந்தமை போற்றி - அவ் விடத்து (முன்பு) அணைத்தலை விடாத அவரது கைகள் (இன்று) நெகிழ்ந்தமை கண்டு, செவிலி கை மதவு நடை என் புதல்வனை நோக்கி - செவிலியின் கையிலிருந்த மெல்லிய நடையினையுடைய என் புதல்வனை நோக்கி, நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் - நீயிர் நுமது அழகிய பரத்தை மார்க்குப் பொருந்தியவர் ஆவீர், இஃதோ செல்வ தற்கு ஒத்தனம்யாம் என - இதோ இந்தச் செல்வனுக்கு நாங்கள் பொருந்தியவர்கள் ஆவோம் என்று கூறி, மெல்ல என் மகன் வயின் பெயர் தந்தேன் - மெல்லென என் மகனிடத்துச் சென்றேன்;

உக-௩. அதுகண்டு யாமும் காதலம் அவற்கு என - அது கண்டு தலைவர் அச் செல்வன் பால் யாமும் காதலுடையேம் என்று கூறி, சாஅய் சிறுபுறம் கவையினனாக - பணிந்து எனது முதுகினை அணைத்துக் கொண்டனராக,

உ௩- ரு. உறுபெயல் தண்துளிக்கு ஏற்ற - மிக்க பெயலாய குளிர்ந்த மழையை ஏற்றுக்கொண்ட, பல உழு செஞ்செய் மண் போல் - பல முறையும் உழுதிட்ட செம்மையாகிய செய்யின் மண் போல, நெஞ்சு நெகிழ்ந்து கலுழ்ந்து - என் நெஞ்சம் நெகிழ்ந்து கலங்கி,

ரு. அல்கல் - இரவில்,

உரு-௬. அவன் அறை போகிய அறிவினே ற்கு - அவர் பால் என்னை வஞ்சித்துச் சென்ற அறிவினேனாகிய எனக்கு,

க-ரு. கூன் முள் முள்ளி குவிகுலை கழன்ற- வளைந்த முள்ளினை யுடைய நீர் முள்ளியது குவிந்த குலைகளினின்று வீழ்ந்த; மீன் முள் அன்ன வெண்கால் மாமலர் - மீனினது முள்ளினை யொத்த வெள் ளிய காம்பினை யுடைய கரிய மலர்களை, பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் - விளையாட்டு மகளிர் தாம் செய்யும் விழாவிற்கு அழகு செய்வனவாகச் சேர்க்கும், அவ்வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப் புலத்தல் கூடுமோ - அழகிய வயல்கள் பொருந்திய வள மிக்க ஊரனாகிய தலைவனைப் புலத்தல் பொருந்து மோ; (இதற்கு யான் என் செய்வேன் !)

(முடிபு) தோழி! தாம் மார்பகம் பொருந்தி முயங்கல் விடால் என்று கூறி யாம் ஓவும் என்னவும் ஒல்லார் இவை பாராட்டிய பருவமும் உள; இனி, தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடை என் புதல்வனை நோக்கி, நல்லோர்க் கொத்தனிர் நீயீர், இஃதோ செல்வற் கொத்தனம் யாமென மகன் வயிற் பெயர்