பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



27

களிற்றியானை நிரை

௬௫

தந்தேன் ; அதுகண்டு யாமும் காதலம் அவற்கெனச் சாஅய்க் கவையினனாக, அவன்கண் நெகிழ்ந்து கலுழ்ந்து நெஞ்சறை போகிய அறிவினேற்கு ஊரனைப் புலத்தல் கூடுமோ.

அல்கல் நெஞ்சறை போகிய என்க.

(வி - ரை.) கூர்முள் என்னும் பாடத்திற்குக் கூரிய முள்ளென . உரைக்க. ஓம், ஓவும் என்பதன் இடைக்குறை; செய்யும் என்னும் முற்று முன்னிலைக்கண் வந்தது. தேம்கொள் - இடங்கொண்ட என்றுமாம். இந்த என்பது இஃதோ எனத் திரிந்தது.

(உ - றை.) 'முள்ளியின் பக்கலிலே தோற்றி வாழும் பூ, அதனை விட்டுப் பிறர்க்குப் பயன் பட்டாற்போல, நம்முடன் பிறந்த நெஞ்சு அவரு டன் ஏகுகையாயிற்று. அவருடைய வதுவை விழவிற்கும் உடலாய்த் திரியாநின்றால் புலத்தல் கூடுமோ என்க' என்பது குறிப்புரை.

(மே - ள்.) 1'அருண்முந்துறுத்த' என்னும் சூத்திரத்துத் தலைவியின் அருண்முந்துறுத்த அன்பு பொதி கிளவிக்கும் பணிந்த மொழிக்கும் இதிலுள்ள 'மண் போல் நெகிழ்ந்து' 'இவை பாராட்டிய பருவமுமுௗ' 'நெஞ்சறை போகிய அறிவினேற்கு' என்பவற்றையும், 2'தன் வயிற் கரத்தல்' என்னுஞ் சூத்திரத்துத் தலைவி மடன் அழிதற்கு 'கவவுக்கை ... பெயர் தந்தேனே' என்றதனையும் காட்டினர் நச்.

3'வினையுயிர் மெலிதல்' என்னும் சூத்திரத்துப் பாராட்டெடுத்தல் முதலிய பன்னிரு நிமித்தமுமின்றி ஆற்றாமை நிமித்தமாகக் கற்பினுட் புணர்ச்சி நிகழ்ந்ததற்கு, 'தண்டுளிக்கேற்ற . . . அறிவினேற்கே' என்பதனையும், 4தெய்வ மஞ்சல்' என்னும் சூத்திரத்து, 'மறைந்தவை யுரைத்தல்' என்பதற்கு,' முயங்கல் விடாஅல் . . . அஞ்சினரே' என்பதனையும் எடுத்துக் காட்டினர் பேரா.


 
27. பாலை
 

[செலவுணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.]


கொடுவரி இரும்புலி 5தயங்க நெடுவரை
ஆடுகழை இருவெதிர் கோடைக் கொல்குங்
கானங் கடிய வென்னார் நாமழ
நின்றதில் பொருட்பிணிச் சென்றிவண் தருமார்

ரு) செல்ப என்ப என்போய் நல்ல
மடவை மன்ற நீயே வடவயின்
வேங்கடம் பயந்த வெண்கோட் டியானை -
மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்குங்
கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன

க0) நகைப்பொலிந் திலங்கும் எயிறுகெழு துவர்வாய்


1. தொல். கற்பி. ௨0. 2. தொல், பொருளியல், கக, 3. தொல். மெய்ப். ௩0. 4. தொல். மெய். உச. (பாடம்) 5. தயங்கு,