பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௬௬

அகநானூறு

[பாட்டு




தகைப்பத் தங்கலர் ஆயினும் இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம்படத்
தெண்ணீர்க் கேற்ற திரள்காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும் அமையாப் பருந்துபட

கரு) வேத்தமர்க் கடந்த வென்றி நல்வேல்
குருதியொடு துயல்வந் தன்னநின்
அரிவே யுண்கண் அமர்த்த நோக்கே.

- மதுரைக் கணக்காயனார்.

(சொ - ள்.) க-௬. கொடுவரி இரும்புலி தயங்க - வளைந்த கோடுகளையுடைய பெரிய புலி வெளிப்பட்டுத் தோன்ற, நெடு வரை ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் கானம் - நீண்ட மலையில் அசையும் தண்டினையுடைய வலிய மூங்கில்கள் மேல் காற் றினால் தளர்ந்து வளையும் காட்டு நெறி, கடிய என்னார் - கொடிதென்று எண்ணாராய், நாம் அழ - நாம் (பிரிந்து) அழுதிருக்க, நின்றது இல் பொருட் பிணி சென்று இவண் தருமார் செல்ப என்ப என்போய் - ஓரிடத்தும் நிலை பெறுவதில்லாத பொருட் பற்றினால் பிரிந்து சென்று அதனை இங்கு ஈட்டிவரச் சுரம் செல்வர் என ஊரார் கூறுவர் என்று சொல்லும் தலைவியே, நீ மன்ற நல்ல மடவை - நீ உறுதியாக நல்ல மடமையை யுடையை;

௬- கக. வடவயின் வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கை அம் பெருங் துறை முத்தின் அன்ன - வடதிசைக் கண் வேங்கடமலைப் பக்கத்திலுள்ள அரசர் திறையாகக் கொடுத்த வெள்ளிய கோட்டினையுடைய யானை களையுடைய வீரம் பொருந்திய போரில் வல்ல பாண்டியர்கள் அறநெறி வழாது காக்கும் அழகிய கொற்கைப் பெருந்துறையில் பெறும் முத்துக்களைப் போன்ற, நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்வாய்-முறுவலாற் சிறந்து விளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற நின்வாய், தகைப்பத் தங்கலர் ஆயினும் - தடுத்தலால் தடைப்பட்டுத் தங்கா ராயினும்,

க௩-எ. தேம்பட தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளைப் பெருந்தகை சிதைத்தும் அமையா - தேன் உண்டாகத் தெளிந்த நீரினை ஏற்ற திரண்ட தண்டினையுடைய குவளைப் பூவின் சிறந்த அழகினை வென்று கெடுத்தும் அமையாமல், பருந்துபட வேந்து அமர்க் கடந்த வென்றி நல்வேல் குருதியொடு துயல்வந்தன்ன - பருந்துகள் வந்து சூழ அரசர் தம் போர்களை வென்ற வெற்றி பொருந்திய நல்ல வேல் இரத்தம் தோய்ந்து பிறழ்வது போன்ற, நின் அரி வேய் உண் கண் அமர்த்த நோக்கு - நினது செவ்வரி பொருந்திய மையுண்ட கண்ணின் மாறுபட்ட பார்வை,

கக-உ. இகப்ப யாங்ஙனம் விடுமோ - அவரை எங்ஙனம் கடந்தேக விட்டுவிடும்? (விடாது காண்.)