பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

களிற்றியானை நிரை

௬௭



(முடிபு) தோழி நம் தலைவர் கானம் கடிய என்னார், நாம் அழ, நின்றது இல் பொருட்பிணிச் சென்று இவண் தருமார், செல்ப என்ப என்போய், நீ மடவை மன்ற; துவர்வாய் தகைப்பத் தங்கலராயினும், நின் உண்கண் அமர்த்த நோக்கு இகப்ப யாங்ஙனம் விடும்? விடாது காண்.

(வி - ரை.) புதருட் கிடந்த புலி வெளிப்பட மூங்கில் அசையும் என்க. கடியவென்னார் தருமார் நாம் அழச் செல்வர் என்றார் என்று கூட்டுக. நின்றது - நிலைபேறு. வேங்கடம் பயந்த யானை என்றது அம் மலையையுடைய அரசர் திறையாகத் தந்த யானை என்றவாறு. யானையையுடைய பாண்டியர் எனவும் போரினில் வல்ல பாண்டியர் எனவும் இயையும். பாண்டியர் போரிலே தறுகண்மையும் நாடு காத்தலில் தண்ணளியும் உடையரென்பார் மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் என்றார். பாண்டியர் காக்கும் கொற்கை; பாண்டியர் நாடு காத்தற்கு இடனாகிய கொற்கை எனலுமாம். துவர்வாய் தகைப்பத் தங்கலராயினும் என்றது அது தகைத்தல் கொண்டே போக்கொழிவர் என்பது தோன்ற நின் றது. கோடைக்கு ஒல்கும் என்பதனை மூன்றன் உருபாகவும், தெண் ணீர்க்கு ஏற்ற என்பதனை இரண்டனுருபாகவும் விரித்துரைக்க. அமையா என்னும் எதிர்மறை யெச்சம் துயல் வந்தன்ன என்னும் குறிப்பு வினை கொண்டு முடிந்தது. வேந்து, வேத்தென விகார மாயிற்று. அமர்த்த நோக்கு - பொருந்திய நோக்குமாம்.


 
28. குறிஞ்சி
 

[தலைமகன் சிறைப்புறத்தா னாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. இது பகலே சிறைப்புறம்.]


மெய்யில் தீரா மேவரு காமமொ
டெய்யா யாயினும் உரைப்பல் தோழி
கொய்யா முன்னும் குரல்வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்

ரு) இருவி தோன்றின பலவே நீயே
முருகுமுரண் கொள்ளும் தேம்பாய் கண்ணிப்
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொ டமைந்தனை யாழநின்
பூக்கெழு தொடலை 1நுடங்க வெழுந்தெழுந்து

க௦) கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி
ஆங்காங் கொழுகா யாயின் அன்னை
சிறுகிளி கடிதல் தேற்றாள் இவளெனப்
பிறர்த்தந்து நிறுக்குவ ளாயின்

கச) உறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே.

--பாண்டியன் அறிவுடை நம்பி.


(பாடம்) 1. நுடங்க எழுந்து