பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



33

களிற்றியானை நிரை

௭௭


33. பாலை
 

[தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி
மனைமாண் கற்பின் வாணுதல் ஒழியக்
கவைமுறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்றோங் குயர்சினை இருந்த வன்பறை

ரு) வீளைப் பருந்தின் கோள்வல் சேவல்
வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும்
இளிதேர் தீங்குரல் இசைக்கும் அத்தம்
செலவருங் குரைய என்னாது சென்றவண்
மலர்பா டான்ற மையெழில் மழைக்கண்

க0) தெளியா நோக்கம் உள்ளினை உளிவாய்
1வெம்பரல் அதர குன்றுபல நீந்தி
யாமே எமியம் ஆக நீயே
ஒழியச் சூழ்ந்தனை யாயின் முனாஅது
வெல்போர் வானவன் கொல்லி மீமிசை

கரு) நுணங்கமை புரையும் வணங்கிறைப் பணைத்தோள்
வரியணி அல்குல் வாலெயிற் றோள்வயின்
பிரியா யாயின் நன்றுமன் தில்ல
அன்றுநம் மறியா யாயினும் இன்றுநம்
செய்வினை ஆற்றுற விலங்கின்

௨௦) எய்துவை அல்லையோ பிறர்நகு பொருளே.

--மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.


(சொ - ள்.) க-உ. நெஞ்சே -, வினை நன்று ஆதல் வெறுப்பக் காட்டி - பொருள் ஈட்டும் வினை அறம் முதலிய பயந்து நன்றாதலை மிக எடுத்துரைத்து, மாண் கற்பின் வாள் நுதல் மனை ஒழிய - மாண்புற்ற கற்பினையுடைய ஒள்ளிய நெற்றியினை யுடைய நம் தலைவி மனை யில் இருப்ப,

௩-எ. முறி இழந்த கவை செந்நிலை யா அத்து - தளிர்கள் இழந்த கிளைகளை யுடைய செவ்விய நிலையினை யுடைய யாமரத்தில், ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த - கப்பின்றி ஒன்றாக மிக உயர்ந்துள கிளையிலிருந்த, வன் பறை வீளை கோள் வல் பருந்தின் சேவல் - வலிய பறத்தலையுடைய சிள்ளென்று ஒலி செய்யும் இரை கொள்ள வல்ல பருந்தினது சேவல், வளை வாய்ப் பேடை வருதிறம் பயிரும் - வளைந்த வாயினையுடைய தனது பேடை தன்பால் வரும் பரிசு அழைக்கும், இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் - இளியெனும் இசைபோன்ற இனிய குரல் ஒலித்துக்கொண்டிருக்கும் அரிய சுர நெறிகள்,



(பாடம்) 1. வெம்பர றாஅய.