பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௭௮

அகநானூறு

[பாட்டு


அ - க௩. செலவு அருங்குரைய என்னாது சென்று - செல்லுதற்கரியவென அதுபோதே கூறாது இத்துணையும் போந்து, அவள் மலர் பாடு ஆன்ற மை எழில் மழைக் கண் - தலைவியது மலர் தன் பெருமை இழத்தற்குக் காரணமான மையுண்ட அழகிய குளிர்ந்த கண்ணின், தெளியா நோக்கம் உள்ளினை- மயங்கிய நோக்கத்தினை நினைத்து, உளி வாய் வெம்பரல் அதர குன்று பல நீந்தி- உளியின் வாய்போன்று கூரிய வெவ்விய பரல்கள் பொருந்திய நெறிகளையுடைய குன்றுகள் பலவற்றைக் கடந்து வந்தும், யாமே எமியம் ஆக-யாம் தமியேம் ஆக, நீயே ஒழியச் சூழ்ந்தனையாயின்-நீ எம்மை விட்டு நீங்கிப் பிரிந்தேகக் கருதினையாயின்,

க௩-எ. வெல்போர் வானவன் முனாஅது கொல்லி மீமிசை-போர் வெல்லும் சேரனது பழையதாகிய கொல்லிமலையின் உச்சியில் உள்ள, நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத்தோள்-சிறிய மூங்கிலை யொத்த வளைந்த முன் கையினை யுடைய பெரிய தோளினையும். வரி அணி அல்குல்- திதலையை அணிந்த அல்குலினையும், வால் எயிற்றோள் வயின்- வெள்ளிய எயிற்றினையுமுடைய தலைவியிடத்திருந்து, பிரியாயாயின் நன்று மன் - பிரியாதிருப்பாயாயின் நன்றாகும்; அது செய்திலையே;

௧௭-௨௦. அன்று நம் அறியாய் ஆயினும்-பிரிகின்ற அன்று நம் இயல்பினை அறிந்து கொள்ளாய் ஆயினும், இன்று நம் செய்வினை ஆற்று உற விலங்கின்- இன்று நமது செய்யப்படும் இவ் வினையினை இந்த இடைநெறியில் உற்ற அளவில் விலக்குவையாயின், பிறர் நகுபொருள் எய்துவை அல்லையோ- பிறர் சிரிக்கத்தக்க இகழ்ச்சியை அடைவாய் அல்லையோ?

(முடிபு.) நெஞ்சே! வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி, மனை வாணுதல் ஒழிய, அத்தம் செலவு அருங்குரைய என்னுது சென்று, அவள் நோக்கம் உன்னினை ஒழியச் சூழ்ந்தனையாயின், வாலெயிற்றோள்வயின் (அன்றே) பிரியாயாயின் நன்று, மன்; இன்று நம் செய்வினை ஆற்றுற விலங்கின் பிறர் நகுபொருள் எய்துவை யல்லையோ.

(வி-ரை.) காட்டிச் சென்றுஒழியச் சூழ்ந்தனையாயின் என்க.மனை ஒழிய எனவும், பயிருங் குரல் எனவும், முனாஅது கொல்லி எனவும் இயையும், இளி-சட்ஜ சுரம்; குரல் மத்திமம் ஆகலின் என்க. மெத்தெனப் பேடையை அழைத்தலின் மந்த சுரம் ஆயிற்று. சென்று என்றது போந்து என்றபடி. தில், அசை; ஈறு திரிந்தது, யாமே நீயே என்னும் ஏகாரம் பிரிநிலை.


 
34.முல்லை
 

[வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.]


சிறுகரும் பிடவின் வெண்டலைக் குறும்புதல்
கண்ணியின் மலரும் தண்ணறும் புறவில்
தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன