பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௮௦

அகநானூறு

[பாட்டு

 போன்ற கழுத்தினை யுடைய பசிய கிளியினை, முன் கை ஏந்தி - தனது முன் கையில் ஏந்தி, இல்லவர் அறிதல் அஞ்சி - இல்லில் உள்ளார் அறிந்து விடுவரோ என அஞ்சி, மெல்லென - மென்மையாக, சென்றிசினோர் திறத்து இன்று வரல் உரைமோ என - நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் திறத்து ஒன்று உரைப்பையாயின் அவர் இன்று வருவார் என உரைப்பாய் என்று, மழலை இன் சொல் பயிற்றும் - மழலை யாகிய இனிய சொற்களைப் பயில்வித்திருக்கும், நாண் உடை அரிவை மாண் நலம் பெற - நாணம் மிக்க நம் தலைவியது மாண்புற்ற நலத்தினை அடையவும்,

க0. நல் வலம் பெறுந செல்க தேரே - தேரைச் செலுத்தும் நற்றிறம் வாய்ந்த பாகனே, நம் தேர் விரைந்து செல்வதாக.

(முடிபு) நல்வலம் பெறுந! நெஞ்சம் ஏமுற அரிவை மாணலம் பெறச் செல்க தேர்.

இரலை புறவில் பிணை அருத்தித் துஞ்சு புறங்காக்கும் பெருந்தகை எனவும் வரைப்பில் கிளி முன்கை யேந்தி இன்று வரல் உரைமோ என இன்சொற் பயிற் றும் அரிவை எனவும் இயையும்,

(வி - ரை.) பூவினால் வெண்டலையாயிற்று. கவை - புதர்களை ஒடுக்குதற்குக் கொண்ட கவைக்கோல். மறியாடு மருங்கின் மடப் பிணை - சூலுற்ற பிணையுமாம். பெருந்தகைக்கு - பெருந்தகைமையால். செல்க - செலுத்துக எனப் பிறவினையுமாம். தார் - கழுத்தின் இரேகை. சென்றிசினோர் திறத்து உரைக்கில் என ஒரு சொல் வருவிக்க. இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லெனச் சொல்லுதலின் நாணுடையாள் ஆயிற்று. 1'உயிரினுஞ் சிறந்தன்று நாண்' என்பவாகலின் நாணுடை அரிவை என்பாராயினர். தலைவன் தன்னை இங்கே இரலையும் பிணையும் வருத்துகின்றன என்பதும், அவளை அங்கே அன்னமும் துணையும் வருத்துவன என்பதும் புலப்படக் கூறினான்.

(மே - ள்.) 2'கரணத்தினமைந்து' என்னுஞ் சூத்திரத்துப் பாக ரிடத்தும் தலைவன் கூற்று நிகழும் என்பதற்கு, ' செல்க தேரே நல்வலம் பெறுக' என்பதனைக் காட்டினர் நச்.


 
35. பாலை
 

[மகட் போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.]

ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர்
ரு) முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த


1. தொல். கள. ௨௨. 2. தொல். கற். ௫.