பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



௮௬

அகநானூறு

[பாட்டு


க-கஎ. கறங்கு இசைக் கங்குல் ஓதை - ஒலிக்கும் ஒலியினை யுடைய வைகறையில் ஆள் அழைக்கும் ஆரவாரத்தையுடைய, கலி மகிழ் உழவர் - மிக்க களிப்புற்ற உழவர், வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி - இரவில் தங்கிய இருள் புலர்கின்ற அவ் விடியலில் வைக்கோலைப் பிரித்துக் கடாவிட்டு அலைத்தெடுத்து, பொங்கழி முகந்த தா இல் நுண் துகள் - தூற்றாப் பொலியினின்றும் முகந்த வலியற்ற நுண்ணிய கூளங்கள், மங்குல் வானின் மாதிரம் மறைப்ப - இருண்ட மேகம்போலத் திசையெங்கும் மறைப்பத் தூற்றி, தொழில் செருக்கு அனந்தர் வீட - தொழிற் செருக்கால் வந்த மயக்கம் ஒழிய, வளியொடு சினைஇய எழில் தகை வண் தளிர் மாஅத்து - தென்றற்காற்றினால் கிளைத்த அழகின் மேன்மையுற்ற வளம் பொருந்திய தளிர்களையுடைய மாமரத்தில், கிளிபோல் காய - கிளிபோன்ற வடிவினையுடைய காய்களைக் கொண்ட, கிளைத்துணர் வடித்து - கிளைக் கொத்துக்களிலிருந்து அவற்றைக் கிள்ளி எடுத்து, புளிப் பதன் அமைத்த புதுக்குடம் மலிர் நிறை - அவற்றொடு புளிக் கும் பதனைச் சேர்த்தாக்கிய புதுக்குடங்களில் மிகப் பெய்த சாரங் களை, வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசுங்குடை - வெயிலி னிடத்துப் பின்புறம் தோன்ற வைத்துப் பதத்திலெடுத்த மிக்க இதழ்களையுடைய பசிய குடைகளால், கயம் மண்டு பகட்டிற் பருகி - குளத்தில் மண்டிய கடாக்களைப் போலக் குடித்து, கொள்ளொடு பயறு காண்வர பால் விரைஇ - கொள்ளும் பயறும் அழகு பொருந்தப் பாலுடன் கலந்து ஆக்கிய, வெள்ளிக்கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை - வெள்ளிக் கம்பியை ஓரளவாக நறுக்கி வைத்தாற் போன்ற வெள்ளிய அவிழ்க் கஞ்சியை, வாங்கு கை தடுத்த பின்றை - வளைத்துண்ட கை போதும் எனத் தடுத்த பின்னர், ஓங்கிய பருதி அம் குப்பை சுற்றி - வட்டமாய் உயர்ந்த ஞாயிறு போன்ற அழகிய நெற்குவியலை நெற்கூடாக்கிச் சுற்றி, பகல் செல - ஞாயிற்றின் வெப்பம் அகல, மருதமர நிழல் எருதொடு வதியும் - மருதமரத்தின் நிழலில் தம் எருதுகளோடு தங்கியிருக்கும், காமர்வேனில் இது - அழகிய வேனிற்காலம் இதுவாகும், மன் - அது கழிந்ததே, மறந்து அவண் அமையாராயினும் - நம் தலைவர் நம்மை மறந்து அங்கே தங்கியிரா ராயினும் அதனால் நாம் பெற்றது என்?

(முடிபு) தோழி! துணையுடையோர்க்கு இது காமர்வேனில் மன், நம் தலை வர் மறந்து அவண் அமையாராயினும் அதனால் நாம் பெற்றது என்னை?

உழவர் விடியலில் வைபெயர்த்தாட்டி, துகள்மாதிரம் மறைப்பத் (தூற்றி), அனந்தர் வீட மலிர் நிறை பருகி, மிதவை தடுத்த பின்றை சுற்றி எருதொடு வதியும் வேனில் என்றியையும்.

(வி - ரை.) கறங்கிசை - அனுகரணம். வளியொடு - வளி யால். மாஅத்து - மாமரத்தில்; அத்து, சாரியை, கிளிபோலும் மாங்காய் உளதென்பதனை, 1'ஊடுமென் சிறுகிளி யுணர்ப்பவண் முகம் போலப்,...கடிகயத் தாமரை கமழ்முகை கரைமாவின், வடி தீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர' எனவும், 2'கொங்கலர் சேர்ந்த


1. கலி. மரு. எ. 2. மணி. கக: ௬௭-எ0.