பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38]

களிற்றியானை நிரை

௮௭

மாங்கனி தன்னைப், பாங்குற விருந்த பல்பொறி மஞ்ஞையைச், செம் பொற் றட்டிற் றீம்பா லேந்திப், பைங்கிளி யூட்டுமோர் பாவையா மென்று ' எனவும் பிற சான்றோர்கள் உவமை கூறியவாற்றானு முணர்க. கிளி மூக்கு மாங்காய் என்னும் வழக்கும் உளது. வடித்து- உறந்து. புளிப் பதன் - புளிப்பையுடைய மாதுளங்காய் முதலிய சில் பதம். இனி, புளிக்கும் செவ்வி யுண்டாக்கப் பெற்ற என்றுமாம். நிறை - ஊறின சாரம்; ஆகுபெயர். விரைஇ ஆக்கிய என ஒரு சொல் வருவித்துரைக்க. மிதவை - கூழ். வாங்கு கை தடுத்த என்றது, வேண்டுமளவு உண்ட என்றபடி. எருதொடு வதியும் என்றது, அவர்கள் இயல்பு கூறியபடி,

(மே - ள்.) 1'உரிப் பொருளல்லன மயங்கவும் பெறுமே' என் னுஞ் சூத்திரத்து, உம்மையாற் றழுவிய பாலை தீம் புனலுலகத்து மயங்கி வந்தது இச் செய்யுள் என்றார் நச்.


 
38. குறிஞ்சி
 

[1. தோழி தலைமகன் குறை கூறியது. 2. பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியதுமாம். 3. தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதுமாம்.]


விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்
தெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்
அஞ்சிலை யிடவ தாக வெஞ்செலற்
கணைவலந் தெரிந்து துணைபடர்ந் துள்ளி

ரு) வருதல் வாய்வது வான்தோய் வெற்பன்
வந்தன னாயின் அந்தளிர்ச் செயலைத்
தாழ்வில் ஒங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்
றூசல் மாறிய மருங்கும் பாய்புடன்
ஆடா மையிற் கலுழ்பில தேறி

க0) நீடிதழ் தலைஇய கவின்பெறு நீலம்
கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை
மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரற்
குலவுப்பொறை இறுத்த கோற்றலை இருவி
கொய்தொழி புனமும் நோக்கி நெடிதுநினைந்து

கரு) பைதலன் 2பெயரலன் கொல்லோ ஐதேய்
கயவெள் ளருவி சூடிய உயர்வரைக்
கூஉங்கண் அஃதெம் ஊரென
ஆங்கதை யறிவுறல் மறந்திசின் யானே.

--வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்.


1. தொல். அகத். க௩. (பாடம்.) 2. பெயர்வன்.