பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 75


குவளைப்பூ முறியப் பாய்ந்ததுபோல, யாம் வருந்த இங்கே வந்தனை. குவளையைச் சூழ்ந்த வள்ளையை மயக்கியதுபோல, என்னைச் சார்ந்த சுற்றத்தினர் வருந்துமாறும் செய்தனை. . நாட்காலையில் பலருங் காண, அது குளத்தைக் கலக்குவது போல, ஊரவர் காண, நீயும் அனைவரையும் கலக்க முறுமாறு செய்தனை அல்லையோ? எனக் கொள்ளுக.

விளக்கம்: 'நாட்காலை' என்றது, பலரும் துறைக்கு வரும் காலம் என்றதனால்.அதனால், பலரும் அரிய நேர்ந்தது என்பதும் உணர்க. வரலாற்றுக் குறிப்பு உடைய சிறந்த பாடல் இது.

‘வெற்றிவீரர் ஆர்ப்பினும் அலர் பெரிது’ என்றது அதனை மிகைப்படுத்திக் கூறியதாகும். தலைவன் படைத்தலைவருள் ஒருவன் என்பதும் விளங்கும்.

37. நலம் நுகரும் துணை!

பாடியவர்: விற்றுற்று மூதெயினனார். திணை: பாலை. துறை: 1. தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது. 2. பிரிவு உணர்த்திய தோழி சொல்லியது. -

(இளவேனிற் காலத்தும் அவன் வராமற்போகவே, தலைவி மிகவும் உள்ளம் நைந்தாள். அவன் வராமல் இரான் என்பது உண்மையாயினும் கூடிமகிழும் காலம் வந்தாயிற்றே என்கிறாள். ‘நம்மை மறந்து அவர் இரார்' எனினும், துணையுடையோருக்கு இது சிறந்த காலம் என்றதால், அவர் பிரிவைத் தோழிக்கு உணர்த்துகிறாள்.)

          மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்குஇசைக்
          கங்குல் ஓதைக் கலிமகிழ் உழவர்
          பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்,
          மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
          வைகுபுலர் விடியல் வைபெயர்த்து ஆட்டித் 5

          தொழிற் செருக்கு அனந்தர்விட, எழில்தகை
          வளியொடு சினைஇய வண்தளிர் மாஅத்துக்
          கிளிபோல் காய கிளைத்துணர் வடித்துப்
          புளிப்பதன் அமைந்த புதுக்குட மலிர்நிறை ,
          வெயில்வெரிந் நிறுத்த பயில்இதழ்ப் பசுங்குடைக், 10

          கயமண்டு பகட்டின் பருகிக், காண்வரக்
          கொள்ளொடு பயறுபால் விரைஇ, வெள்ளிக்
          கோல் வரைந்தன்ன வால்அவிழ் மிதவை
          வாங்குகை தடுத்த பின்றை ஓங்கிய,
          பருதிஅம் குப்பை சுற்றிப், பகல்செல், 15