பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 77



38. கூஉங் கண்ணஃது எம் ஊர்!

பாடியவர்: வடம வண்ணக்கன் பேரிசாத்தனார். திணை: குறிஞ்சி. துறை: 1. தோழி தலைமகன் குறை கூறியது. 2. பகலே சிறைப்புறமாகத்தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது. 3. தோழி குறிபெயர்த்திட்டுச் சொல்லியது. 4. தொல்காப்பிய உரையாசிரியரான நச்சினார்க்கினியர், 'அவன் வரம்பிறத்தல்' என்னுஞ் சூத்திர உரையிலே, இது தலைவி களஞ்சுட்டியதாகும் என உரைப்பர். 5. பாங்கி ஆடிடம் விடுத்துக் கொண்டகல்லுக்கு இதனை மேற்கோள் காட்டுவர் அகப்பொருள் விளக்க உரையாசிரியர்.

(பகற்குறியிலே கூடிவந்த தலைவி. திணை அறுத்தபின், அவன் வந்து தன் ஊர்க்கு அணித்தாகிய இடத்திலே, இரவுக்குறி நேர்ந்து கூடுதற்கு ஏற்றவாறு, தன் ஊர்பற்றி அவனுக்கு முன்னரே கூறாததை நினைந்து வருந்துகிறாள்.)

          விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்,
          தெரிஇதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்,
          அம்சிலை இடவது.ஆக, வெஞ் செலற்
          கணைவலம் தெரிந்து, துணைபடர்ந்து உள்ளி;
          வருதல் வாய்வது வான்தோய் வெற்பன், 5

          வந்தனன் ஆயின், அம்தளிர்ச் செயலைத்
          தாழ்வுஇல் ஓங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று
          ஊசல் மாறிய மருங்கும், பாய்புஉடன்
          ஆடா மையின் கலுழ்பு:இல தேறி,
          நீடுஇதழ் தலையிய கவின்பெறு நீலம் 10

          கண்என மலர்ந்த சுனையும், வண்பறை
          மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்
          குலவுப்பொறை யிறுத்த கோல்தலை மருவி
          கொய்துஒழி புனமும், நோக்கி, நெடிதுநினைந்து,
          பைதலன் பெயரலன் கொலோ? ஐ.தேங்கு- 15

          அவ்வெள் அருவி சூடிய உயர்வரைக்
          கூஉம் கணஃது எம்.ஊர் என
          ஆங்குஅதை அறிவுறல் மறந்திசின், யானே!

இதழ் விரிந்த பூங்கொத்துக்களையுடைய வேங்கையின், வண்டினம் மொய்க்கும் புதுப்பூக்களாகிய கண்ணியைத் தலையிலே சூடியவன்; ஆராய்ந்து எடுத்த இதழ்களையுடைய குவளை மலர்களினால் தொடுக்கப்பெற்றுள்ள தேன்பாயும் தாரினை மார்பிலே அணிந்தவன்; அழகிய வில்லானது