பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

அகநானூறு - மணிமிடை பவளம்



சொற்பொருள்: 1. உயிர் கலத்தல்-முன்பற்பல பிறவிகளினும் கணவன் மனைவியராக இணைந்து வாழ்ந்த உயிரின் கலப்பு: இதனை உழுவலன்பு என்பர். ஒன்றிய ஒன்றுபட்ட தொன்றுபடு நட்பு- பழைமையாக வருகின்ற தொடர்பு.2. செயிர் - குற்றம். செறிந்தோர் - கலந்தவர். 4. பொய்வல் உள்ளம் - உள்ளத்திலே ஒன்றைக்கொண்டு வெளியே ஒன்றாகப் பேசும் உள்ளம். 6. கொள்கை - குறிக்கோள். 8. சேண் விளங்குதல் - தொலை தூரங்கட்கும் பரவியிருத்தல், 9. நூறி அழித்து. 10. வெஃகிய கவர்ந்த பொலம்பூண் - பொன்னாலான பூண் கிள்ளி - சோழன். 11. நாப்பண் - நடுவிடத்தே. 12. படப்பை - தோட்டக் கால்கள் 14 விழுநிதி - சிறந்த செல்வம் அற்சிரம் - முன்பணி. 17. கவுள் - கன்னம். கடாஅ யானை - களிற்று யானை. 20. நாட்பூ - புதுப்பூ அன்று மலர்ந்த பூ. 21. மேக்கெழு மேனோக்கி எழுந்த -

விளக்கம்: கார்காலத்து வருவதாக உறுதிகூறிப் பிரிந்தவன், முன்பணிக்காலம் வந்தும் வந்தானில்லையே என்ற ஏக்கம், அவள் சொற்களிலே இழையோடினாலும், ‘நம்மை வருந்தவிட்டுச், சொல்லும் பொய்த்துப் பிரிந்தனர் என்றாலும், பொருளாயினும் அவருக்கு எளிதிலே வாய்ப்பதாக என்று சொல்லுகிறாள். அது அவள் ஆற்றியிருப்பாள் என்பது படச் சொன்னது போலத் தோன்றினும், அவளுடைய ஆற்றாமையின் மிகுதியையே உரைத்ததாகும்.

பாடபேதங்கள்: 5. துனியில் கொள்கையர். 18. வாமூர்பு இழியும். 22 குன்றச் சிறுநெறி.

206. என்ன சொல்லப்படுமோ?

பாடியவர்: மதுரை மருதனிள நாகனார். திணை: மருதம். துறை: வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயின் மறுத்தது.

(பரத்தையின் உறவிலே திளைத்திருந்த தலைவன், தன் மனைவியின் நினைவு மேலெழ, அவளிடம் திரும்புதற்கு விரும்புகின்றான். தன் செயலால் அவள் ஊடிச் சினங்கொண் டிருப்பாள் என்பதை அவனும் அறிவான். ஆகவே, விறலியை முதலில் தூதனுப்பத் தலைவி அவளிடம் இப்படிக் கூறுகிறாள்.)

        என்னெனப் படுங்கொல்-தோழி!-நல்மகிழ்ப்
        பேடிப் பெண்கொண்டு!ஆடுகை கடுப்ப
        நகுவரப் பணைத்த திரிமருப்பு எருமை