பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

அகநானூறு - மணிமிடை பவளம்


        அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
        வண்டிறை கொண்ட எரிமருள் தோன்றியொடு. 2O

        ஒண்பூ வேங்கை கமழும்
        தண்பெருஞ் சாரல் பகல்வந் தீமே!

எம் தலைவனே தன் இனத்தினைப் பேணிப்போற்றுகின்ற தன்மையினையும், கடுமையான நடையினையுமுடைய வலிமையான களிறானது, மூங்கில் முளைகளைத் தன் இனத்திற்கு எல்லாம் உண்பித்துப், பின் வேண்டும் அளவு தழைகளையும் உண்பித்திருக்கும் தன்மை உடையது காடு. வாளின் நிறம் போன்ற உருவத்துடன், ஒன்றுபடுவதுபோல மின்னலிட்டுப் பெரிய பலவாகிய மழைத் துளிகளையும் சிதறி, வானத்திலே எங்கும் பரந்து, பெருமலையின் குளிர்ந்த உச்சிகளும் அதிருமாறு கவிந்து கொண்டு, மேகமானது, இடி முழக்கத்துடன் பரந்திருக்கும் இருள்மிகுந்த நள்ளிரவு வேளையிலே, -

“சிறந்த அணிகலன்களால் பொலிவுற்று விளங்கும் காண்பதற்கு இனிய சாயலினை யுடையவளே! வளைந்து திரட்சியுற்றிருக்கும் தன்மையினையுடைய நின்னுடைய தோள்களைச் சேர்ந்திருத்தல் அல்லாமற் போனால், எம் கண்கள், ஒரு போதும் துயிலாவாகும்' என்று கூறியவனாக,

நீயும் இருள் மயக்கம் உடைய நடு யாமத்திலே வழி தடுமாறுதலால் விலகி வழிவருவாரை, வரிகள் விளங்கும் புலியானது கொல்லுதற்கு எதிர்பார்த்திருக்கும், பெரிய மலையின் பிளப்பினையுடைய இடமும் வருவதற்கு அரிதாகும் என்று கருதாதவனாக, வருவதற்கு மிகவும் எளிதானதாகவே எண்ணுகின்றனை.

நுண்மையாக அறைத்துக் கூட்டிப் பல மணங்களைக் கலந்த, மாட்சியுள்ள சந்தனம் குளிர்ச்சியாக மணம் வீசிக் கொண்டிருக்கின்ற நின்னுடைய மார்பினை, ஒரு நாளேனும் இறுகத் தழுவாதிருந்தோமானால், யாங்களும்,மேம்பட்ட அணிகள் நெகிழ்ந்துசரிய, உடல் மெலிந்து விடுகின்றோம். அதனால்.

எம் அந்த நிலையினை எம் அன்னையே அறிந்தாலும் அறிவாளாக அலர் உரைக்கும் வாயினரான பெண்டிர்களது சொற்களை எம் பழைமையான ஊரே கேட்டுப் பழித்தாலும் பழிக்க! வண்டுகள் மொய்க்கின்ற நெருப்பைப் போன்ற தோன்றிப் பூவுடனே, ஒள்ளிய வேங்கைப் பூவின் மணமும்