பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அகநானூறு - மணிமிடை பவளம்சொற்பொருள் : 1. உயங்கிய - வாடிய உறங்கிய - ஒட்டிப் போன. 2. ஆடாப் படிவத்து ஆன்றோர் - நீராடாத விரதத்தையுடைய ஆன்றோர். 3. நிரைபுடன் செல்லும் - மந்தையாய்க் கூட்டங்கூடிச் செல்லும், 6. ஐங்கூந்தல் - ஐந்து பகுதியையுடைய கூந்தல் நல்லகம் - நல்ல மார்பம் 7 அழிதக உடைமதி அழிவு பொருந்தப் பிளக்க, 8. நிலவென நிலவொளி போல.9. நெய்கனி - நெய்யாற் கனிந்த வேற்படை நெய்யாற் கனிந்து நிலவென ஒளிசெய்து விளங்கிற்றென்க. 10. மழை - மழை மேகம்தோல் - கிடுகு 11. கழை ஒடக் கோல் 12, இறவு - இறால்மீன். கோதை - நீராடும் மகளிர் கழித்துப் போட்ட தலைமாலை. 13. ஒதம் - அலை

உள்ளுறை: ஒதம் இறவினையாதல் கோதையினையாதல் ஒன்றினைக் கொள்ளாது இறவொடு வருதலும், கோதையொடு பெயர்தலும் போல, நெஞ்சமும் போதல் தவிர்தல் என்னும் இரண்டனுள் ஒன்றினைக் கொள்ளாது, முதற்கண் பொருளை உட்கொண்டு செலவயர்தலும், பின்னர் அதனை விடுத்து சில்லைங் கூந்தலாளது ஆகத்தை உட்கொண்டு செலவொழிதலுமாக இருபாலும் வருந்தா நின்றது என்க.

மேற்கோள்: வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும், என்னும், ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ என்னும் கற்பியற் சூத்திரப் பகுதிக்குக் கூறும் விசேட உரையுள், ‘விழுமமாவன, பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக் கனவிற் கூறுவனவும், போவேமோ தவிர்வேமோ என வருந்திக் கூறுவனவும்.பிறவுமாம்' என்று கொண்டு, இப்பாட்டுப் போவேமோ தவிர்வேமோ என்றது என்றும்,

‘நோயும் இன்பமும்' என்னும் பொருளியற் சூத்திரவுரையில், ‘உண்ணாமையின்’ என்னும் அகப்பாட்டினுள், இறவொடு வந்து. பொருட்கே' என்றவழி, ‘அழிதக வுடைமதி வாழிய நெஞ்சே என்றதனால், நிலையின்றாகுதி என நெஞ்சினை உறுப்புடையது போலக் கழறி நன்குரைத்தவாறும், ஒததத்தையும் நெஞ்சையும் உயர்திணையாக்கி உவமவாயிற் படுத்தவாறுங் காண்க” என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

பாடபேதங்கள் : 1. உறங்கிய 8. உடையை வாழி நெஞ்சே 9. லெஃகிலை. 14. ஒன்றிற் கொல்லாய்.

124. பாசறை வருத்தம் வீட!

பாடியவர்: மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார். திணை: முல்லை. துறை: தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது.