பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 9




(போர்மேல் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், பகைவர் பணிந்து போரும் நின்றதாயின், இவ்வருத்தம் தீரத்தேரை விரைந்து செலுத்துக’ என்று பாகனிடம் கூறுதல்)

        ‘நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
        வந்துதிறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து
        ‘சென்றீக என்ப ஆயின், வேந்தனும்
        நிலம் வகுத்துறாஅ ஈண்டிய தானையொடு
        இன்றே புகுதல் வாய்வது; நன்றே, 5

        மாட மாண்நகர்ப் பாடமை சேக்கைத்
        துனிதீர் கொள்கைநம் காதலி இனிதுறப்,
        பாசறை வருத்தம் வீட, நீயும்-
        மின்னுநிமிர்ந் தன்ன பொன்னியற் புனைபடைக்,
        கொய்சுவல் புரவிக், கைகவர் வயங்குபரி, 10

        வண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை
        வீகமழ் நெடுவழி ஊதுவண் டிரிய,
        காலை எய்தக், கடவு மதி -மாலை
        அந்திக் காவலர் அம்பணை இமிழ்இசை
        அரமிய வியலகத்து இயம்பும் 15

        நிரைநிலை ஞாயில் நெடுமதில் ஊரே.

'பகைவர் நல்ல ஆபரணங்களை யானைமீது எடுப்பித்துக் கொண்டு வந்து திறையாகக் கொடுத்து வணங்கி வழிபாடு வகுத்துக்கொண்டு ஒன்றுகூடிய தனது சேனையோடும், இன்றே தன் ஊர் புகுதல் பெரிதும் மெய்யாகும்;

மாடங்களால் மாட்சிமைப்பட்ட மாளிகையிலே செவ்வியமைந்த பள்ளியிலே வெறுப்புத் தீர்ந்த கோட்பாட்டினையுடைய நம் காதலி இன்பமடையவும், இங்கு நம் பாசறை வருத்தம் ஒழியவும்;

வளவிய பெயலுக்கு மலர்ந்த பசிய கொடியிடத்து முல்லை மலர் மணவாநின்ற நெடிய வழியிலே நுகரும் வண்டுகள் பறந்தோட, இக்காலத்தே;

மின்னல் நுடங்கினாற்போன்று ஒளிவீசுகின்ற பொன்னால் இயன்று அலங்கரித்த பல்லணத்தினையும், கொய்யப்பட்ட உளையினையுமுடைய புரவியைக் கைவிரும்புகின்ற விளக்க மமைந்த செலவு சிறக்க,

அந்திப் பொழுதிற் காக்கும் முறையையுடைய காவலரது அழகிய முரசின் ஆர்க்கின்ற ஒசையானது அகன்ற நிலாவொளி