பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 243



சொற்பொருள்: 1. பயம் - மழை. 2. அயிர் - வரி, அயம் - நீர்நிலை, 3. நிறைபறை - வரிசையாகப் பறத்தலையுடைய, 5. முள்கிய - பதிந்த 10. ததர் தழை - செறிந்த தழை, 13 தொழுதி - கூட்டம்.14 எல்லை போகிய பகற்பொழுது கழிந்த

விளக்கம்: தன் பிரிவால் கலங்கிய கண்ணளாகியும், பசலைபடர்ந்த மேனியளாகியும் கூந்தலைப் பேணாதவளாகியும் தனித்திருந்து துயரால் வருத்தியிருப்பவள் என்று கூறி, அவ்வருத்தம் தீரத் தேரை விரைவிற் செலுத்துக என்றனன்.

பாடபேதங்கள்: 1 கார்ப்பயன் 4. கொளி.இ. 5. மூழ்கிய 8. கண்ணோக்கு ஒளிக்கும். 10. தகர் நனை.

235. காதலர் மறந்தனரோ?

பாடிவயர்: கழார்க் கீரன் எயிற்றியார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதுரத் தோழிக்குச் சொல்லியது.

(தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றவன் கார்காலத்தும் திரும்பி வராதவனாக, அதனால் வாடி நலிந்தனள் தலைவி. தன்பால் வந்து தனக்கு ஆறுதல் கூறுவதற்கு முற்பட்டவளான தோழிக்குத் தன் ஆற்றாமை மிகுதியை இப்படிக் கூறுகின்றாள்.)

        அம்ம-வாழி, தோழி!- பொருள் புரிந்து
        உள்ளார் கொல்லோ, காதலர்? உள்ளியும்,
        சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ?
        பயன்நிலம் குழைய வீசிப், பெயர் முனிந்து,
        விண்டு முன்னிய கொண்டல் மாமழை 5

        மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
        வாடையொடு நிவந்த ஆய்இதழ்த் தோன்றி
        சுடர்கொள் அகலின் சுருங்குபிணி அவிழச்
        சுரிமுகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான்பூ
        விசும்புஅணி மீனின் பசும்புல் அணியக், 1O

        களவன் மண் அளைச் செறிய, அகல்வயல்
        கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ
        மாரிஅம் கரும்பின் ஈரிய குரங்க,
        நனிகடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றிப்,
        பனிகடி கொண்ட பண்பில் வாடை 15

        மருளின் மாலையொடு அருள்.இன்றி நலிய,
        ‘நூதர்இறை கொண்ட அயல்அறி பசலையொடு