பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

308 அகநானூறு - மணிமிடை பவளம்



சொற்பொருள்: பொங்கி - பொலிவுற்று. 2. ஊர்தல் - தவழுதல் அழற்கொடி- நெருப்புச்சுடர். 3. செவ்வரை - செவ்விய மலை. 5 குழிஇ - குழுவி இருந்து. 6. நீர் முதல் நீரின் அடியில். நிதியம் - செல்வம். 7 வயங்குதல் - விளங்குதல், 8. நெறித்த தழைத்த குழைந்த, 9. குழல்குரல் - குழலினது இசைபோன்று இனிதாக எழும் குரல். பாவை - பொற்பாவை. 10. செல்லல் - வருத்தம் 11. கண்பனி - கண்ணிர். பொறை - பொற்றை எனவும் வழங்கும். 12. இன் சிலை - இனிதாகச் சிலைத்தலையுடைய, சிலைத்தல் - ஒலித்தல். கெண்டி - கொன்று. புரைய - உயர்ந்த 13 நிணம் - கொழுப்பு. விழு - கொழுமையான 15. விளர் ஊன் - வெள்ளையான ஊன். தின்ற வேட்கை - தின்றதனாலாயின நீர் வேட்கையுமாம். 16. தோப்பி - தோப்பிக்கள். துகள் - குற்றம். 17. குலாஅ - தழுவிய வளைந்த எனலும் ஆம் கொடு நோக்கு - கொடிய பார்வை.18.பூசா-கழுவாத.19.ஒராஅ-இடைவிடாமல்; ஒருவாது உருட்டும் - விட்டுவிட்டு ஒலிமுழங்கும். குராலொடு - கோட்டானொடு, 20. தூங்கும் - ஆடி இன்புறும் 23 தூக்கிய - துணிந்த,

விளக்கம்: ‘அன்புறு காதலியை அழியவிட்டுச் சென்று தேடிவரும் பொருள்தான் ஒரு பொருளாகுமோ?’ என்று பழிப்பவள், “அது இமையத்தளவோ? அன்றிக் கங்கையிற் புதையுண்ட நந்தரின் பெருஞ்செல்வத்து அளவோ?’ என்கின்றாள்.

பாடபேதங்கள்: 1. விசும்புகுந்து. 5. பாடலிற்குழிஇ. 12. கெண்டிப் பரைய. 16. துகளற விரைந்த 18. புலராக்கையர். 20. பராஅஞ் சிறுரர்.

266. செய்த சூளுறவு! பாடியவர்!

பாடியவர்: பரணர் திணை: மருதம் துறை: பரத்தையிற் பிரிந்துவந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு: நீடூர்த் தலைவனாகிய எவ்வி என்பவனின் போர்மறம்: உறத்துரிலே எழுந்த வெற்றிவிழா பற்றிய செய்திகள்.

(தன் காதல் மனைவியைப் பிரிந்து, பரத்தை ஒருத்தியுடன் கூடியின்புற்று வந்த ஒரு தலைவன், மறுநாள் தன் தலைவியையும் வந்து அணுக, அவள் அவனுக்கு இணங்காது மறுத்து, இப்படிக் கூறுகின்றாள்)

        கோடுற நிவந்த நீடுஇரும் பரப்பின்
        அந்திப் பராஅய புதுப்புனல், நெருநை,
        மைந்துமலி களிற்றின் தலைப்புணை தழீஇ,