பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 311



மேற்கோள்: ‘சூள்நயத் திறத்தாற் சோர்வு கண்டு அழியினும் என்னும் பகுதிக்கு இப்பாட்டினை உதாரணமாகக் கொண்டு இதனைக் தோழி கூற்றாகக் காட்டுவாரும் உளர் என நச்சினார்கினியர் காட்டுவர்; (தொல், பொருள். 150)

குறிப்பு: நீராடலில் ஈடுபடுவார், அந்நாளிலே ஈரணி என்ற ஒருவகையான உடை உடுத்த செய்தியை, ஈரணி கலைஇ என்ற சொற்களால் உணர்கின்றோம். இது, அந்நாளைய நாகரிகச் செவ்விக்குச் சிறந்தவொரு சான்றாகும்.

பாடபேதங்கள்: 1. பரப்பின் நந்தி, 2. பராஅய புதுப் புனல். 3. மைந்துமலை களிற்றின்.13. பெரும்பூட் பொருந்திலர் பசும்பூட் பொருந்திலர். 16 வயலர். 19. வந்திருக்கும்.

267. தோள்தாம் தவறின!

பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ. திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(தலைவன் பிரிந்ததனால் நொந்து மெலிந்திருக்கும் தலைவியின் நிலைமையைக் கண்டு, தோழி வருத்தினள். அன்று அவன் பேசிய பேச்சும், செய்த சூளுறவும் மறந்தானே? என்ன நொந்து கொள்ளவும் தொடங்கினள். அதற்குத் தலைவி சொல்லும் விடை இது)

‘நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்புகலந்து,
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினைபுரிந்து
திறம்வேறு ஆகல் எற்று? என்று ஒற்றி,
இணைதல் ஆன்றிசின், நீயே, சினைபாய்ந்து,
உதிர்த்த கோடை, உட்குவரு கடத்திடை, 5

வெருக்குஅடி அன்ன குவிமுகிழ் இருப்பை,
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான்பூ
மயிர்க்கால் எண்கின் ஈர்இனம் கவர,
மைபட் டன்ன மாமுக முசுவினம்
பைதுஅறு நெடுங்கழை பாய்தலின் ஒய்யென 10

வெதிர்படு வெண்ணெல் வெவ்அறைத் தாஅய்
உகிர்நெறி ஓசையிற் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம்பல இறந்தோர்
தாம்பழி உடையர் அல்லர்: நாளும்
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்குவினை 15