பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 341


எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த
         அறைஇறந்து, அவரோ சென்றனர்
         பறையறைந் தன்ன அலர்நமக்கு ஒழித்தே.

தோழி! நம்மைத் தலையளி செய்த நம் தலைவர் கூடிய அந்தக் களவுக் காலத்திலே, அக் குறியிடங்களிலே, நம்முடைய அச்சம் நீங்குமாறு, நாள்தோறும் அவர் கூறிய சூளுறவுச், சொற்களை எல்லாம், அவை பழுதுபட்டுப் போகுமே எனக் கருதியும் அவர் அஞ்சாதவராயினர்.

அசைத்தசைந்து செல்லுகின்ற தன்மையுடைய இளமயில்கள் கழித்த தோகையினை, மூங்கிலிலே பிளந்து செய்து கொண்டுள்ள வலிமையான தம் வில்லிலே சுற்றிக் கொள்பவர்கள்; வலியுள்ள அந்தச் சிலையின் அழகிய நாணிற்கும் விளிம்பிற்கும் பொருந்த மிகுந்த ஒலி எழுப்பி விரைந்து செல்லும் விரைவுத் தன்மையுடைய கடுமையான அம்பினைப் பூட்டிக் கொண்டிருப்பவர்கள்; மாறுபாடு மிகுந்தவரான வடுகர். அவர்கள் முன்னே செல்ல, மோரியர் தென்திசை நாடுகளை எல்லாம் வெற்றிகொள்ள எண்ணிப் படையுடன் வந்தனர். அவர்கள், தம் தேர்கள் செல்லுவதற்கு வசதியாக, வானளாவ உயர்ந்த பனியுடைய பெரிய குன்றங்களிலேயும், தமது தேர்களின் ஒள்ளிய கதிர்களையுடைய சக்கரங்கள் தடையில்லாமல் உருண்டு செல்லுமாறு, கற்களை உடைத்து வழி அமைத்தனர். அத்தகைய வழியுடைய பாறைகளையும் எழுந்துள்ள அலரினையும் நமக்காகவென்றே ஒதுக்கிவைத்து விட்டு, அவரோ நம்மைப் பிரிந்து வேற்றுார் சென்று விட்டனர். எனவே, இனி, மேற்கொண்டு நாம் செய்வதனை மட்டுமே ஆராய்ந்து தெரிவாயாக.

என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: தெரிந்திசின் ஆராய்ந்து தெரிவாயாக 2. அகலுள் அகன்ற இடத்தினுள்; அவை களவுக்குறி நேர்ந்த இடங்கள். அச்சற-அச்சம் நீங்கும் படியாக.3. ஒல்கியல் தளர்ந்து அசையும் நடை மடமயில் இளமயில். 5. வான் மூங்கில் 6. அவ்வார் அழகிய நாணாகிய வார். 7. கடுங்கணை - கொடிய அம்பு; கடிதாகச் செல்லுகின்ற அம்பும் ஆம் 8. முரண் மாறுபாடு. முன்னுற முற்பட்டுச் செல்ல 9. தென் திச்ை மாதிரம் தென்திசை நாடுகள். 10 பனி இருங் குன்றம் - பனி மூடிய பெரிய குன்றம் 12. அறை பாறை.13. பறை - நெய்தற் பறை.