பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 365



துகிலினை ஆராய்ந்து நெய்கின்ற காலத்தில்ே பாவானது விரிந்திருப்பது போலக், கானல் விளக்கமாக படர்ந்து அசைந்து கொண்டிருப்பதாகவும் மிகுந்த வெப்பத்தையுடைய அக்காடு தோன்றும்.

குயிற்கண் போன்ற சிறுகாய்கள் முதிர்ந்து, அழகிய பொற்காசு போன்ற நிறமுடைய பெருங்கனிகளாக உகாமரத்தின் மெல்லிய கிளைகளினின்றும் உதிர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கும். வேனிலால் வெம்மையுற்றுக் கிடக்கின்ற அத்தகைய சுரநெறிகளிலே தமியராகத் தாம் செல்வதாக நம் காதலர் எண்ணினர் என்பார்கள்.

தோழி! பண்பு இல்லாத கோவலர்கள் தாயினைப் பிரித்துக் கட்டிவைத்த, நெஞ்சம் தாயையே விரும்பித் தவித்துக் கொண்டிருக்கும் ஆன்கன்றைப்போல, யாமும் உள்ளம் நொந்து நொந்து இன்னாதனவற்றையே சொல்லுகின்றோம் என்கின்றனர் அவர். அவர் இவ்வாறு மயங்கினதுதான் எதனாலோ?

என்று, பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனின் குறிப்பறிந்து, தலைமகள் தோழிக்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 2. வலை வலந்தனைய - வலை பின்னிவைத்தாற் போல, 4. து.கிலாய் - செய்கை துகிலினை ஆய்ந்து நெய்கின்ற காலத்திலே 6. குரூஉக்காய் - மிகச் சிறிதான காய்கள். 7. மணிக்காசு - பொற்காசு மாநிறம் - சிறந்த நிறம். 1. பண்பில் - கோவலர் கன்றினைத் தாயினின்றும் பிரித்துக் கட்டியதனால் அவர் பண்பற்ற கோவலராயினர்.

விளக்கம்: ‘இன்னா மொழிதும் என்ப’ என்பதனை ஊரவர் அலர் உரைத்ததாகவும் கொள்க. அன்றித், தலைவன் தன் செயலை மறைத்து அப்படிக் கூறினான், அவள் புலம்புதல் கேட்டு எனவும் கொள்ளலாம். உகா - கோடைப்பட்ட பகுதிகளிலே வளரும் ஒருவகை முள்மரம்; உடை கருவை போன்றது.

பாடபேதங்கள்: 5. வேல் வெங்களரி. 10. செல்ப என்னுநர். 14 என் மயங்கினர்.நம்.

294. வாடையொடு வருந்துவேன்!

பாடியவர்: கழார்க்கீரன் எயிற்றியார். திணை: முல்லை. துறை: பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.