பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 45


தந்தையின், புறத்துப் பூண்ட கடாவின் நோய்போல, எமது விருப்பமிக்க உயிருக்கு நோய் ஆயிற்று;

என்று, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தான் என்க.

சொற்பொருள் : 1. வேட்டம் - மீன்பிடி வேட்டம். 2. இருங்கழி - பெரிய உப்பங்கழி. செறு - வயல். 3. கொள்ளை சாற்றி - தங்களிற் கூடுதலைக் கூறி.4 என்றுழ் - கோடை விடர பிளந்த கன்முழைகளையுடைய, 5. கதழ்கோல் - விரைகின்ற கோலினையுடைய. உமணர் - உப்பு வாணிகர். 6. தெளிர்ப்ப ஒலிப்ப. 9. விளியறி ஞமலி - குரலறியும் நாய். 10. மதர்கயல் - மதர்த்த கயல்மீன்கள். 11. இதை முயல் - புதுப்புன மாக்கும் பொருட்டாக முயல்கின்றன. புனவன் - புனமுடையான். 12. அள்ளல் - சேறு.

உள்ளுறை : சாகாட்டு எவ்வத்தினைப் பகடுதீரத் தந்தை வர்ங்கினாற்போலத், தலைவி பொருட்டாக எனக்குண்டான எவ்வத்தினை நீ தீர்த்தற்குரியாய் என்று பாங்கனுக்குச் சொல்லி, அவனிற் கூட்டம் வேண்டினானாகக் கொள்க.

விளக்கம் : சில்வளை’ என்றது, பேதைப் பருவத்தாள் என்றற்கு பெதும்பைப்பருவத்துப் பெண்கள் பல்வளையிடுதலை வழக்கமாக உடையவர் என்பர்.

பாடபேதங்கள் : 4என்றுழ்.வீடாஅக்.5.ததர் கோலு மணர். 8. கூறி நுவறலின் மனைய.14. நையூண் பகட்டின். -

141. விழாக் கொண்டாட வருக!

பாடியவர்: நக்கீரர். திணை: பாலை. துறை: “பிரிவிடை ஆற்றாள்’ எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. சிறப்பு : செல்வச் செழுமைமிகுந்த கரிகால் வளவனது இடையாறு என்னும் இடமும், வேங்கடச் சிறப்பும், கார்த்திகை விழாவும்.

(தலைவன் பிரிந்ததனால் தலைவி மிகவும் ஆற்றாமை யுடைய வளாவாள்’ என வருந்திய தோழிக்கு, அவள், திருக்கார்த் திகைத் திருவிழாவினை நம்முடன் சேர்ந்து கொண்டாட வாயினும் அவர் வருக எனத் தான் அதுவரை ஆற்றியிருப்பேன் என்கிறாள்)

        அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
        கனவுங் கங்குல்தோ றிளிைய: நனவும்
        புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின!