பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 69


களிலே தங்கியிருந்து, வழிச்செல்பவர்க்கு நேர்கின்ற துன்பங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும். அத்தகைய காட்டைக் கடந்து சென்றவர் நம் தலைவர்.

அவர், வறுமையுற்றோர் என்று கூறிவரும் இரவலர்களுக்கு உதவும் பொருட்டாக, மிகுதியான பொருளினை ஈட்டும் நினைவுடைய நெஞ்சினராய் விட்டனர். தம்மை விரும்பிவந்து உடன்வாழ்பவரைப் பேணித், தாம் விரும்பிய இனிமை பொருந்திய உறவினர்களோடு இன்பம் பெருகுமாறு கூடியிருந்து மகிழ்ந்திருக்கின்றதற்கும் மாட்டாராயினர். அதனால், அவர் நம்மிடத்தே மிகவும் அருளுடையவர் அல்லர் ஆவர். தோழி! அவர் வாழ்க! என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட - தலைமகள் தோழிக்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. நயந்து - விரும்பி, தம் நயந்து உறைவோர் - தம்மை விரும்பி மணந்து உடன் வாழ்பவர்; துணைவியான தன்னைக் குறித்தது. 2. ஏமுற - இன்பம் பெருக. 3. நகுதல் - மகிழ்ந்திருத்தல். 5. ஆப ஆவர். 5. கால் விரிபு - எத்திசையினும் பரந்து. 6. உறுவளி - பெருங்காற்று 9. தாறு குலை. 1. பதுக்கை பதுக்கைக் கற்கள். 15. கணிவாய்ப் பல்லி - சோதிடங் கூறும் வாயுடைய பல்லியுமாம்.

பாடபேதங்கள்: பாடியவர் பெயர்: காவன் முல்லை மழுக்கரத்தனார்; காவன் முல்லைப் பூக்கரத்தனார்; காவன் முல்லைப் பூச்சாத்தனார் எனவெல்லாம் வழங்கும்.

152. கூந்தலும் தோளும் துயர்தரும்!

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: இரவுக் குறிவந்து நீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: பிண்டனின் ஆற்றலைப் பார்த்துத் தலைவனான நன்னன் அளித்த செய்தி, தித்தன், வெளியன் என்பவரது கடல்வளச் சிறப்பு: நள்ளி, ஆய் ஆகியோரது வள்ளன்மை முதலியவை.

(இரவுக் குறியிலே வந்து, தன் காதலியைத் தழுவி மகிழ்ந்து அவளைப் பிரிந்து செல்லுந் தலைமகன், அவளுடைய கூந்தலின் வனப்பும் தோளின் சிறப்பும் நினைந்து, தன் பிரிவாற்றாமையை நெஞ்சுடன் கூறுகின்றதாக அமைந்தது இச் செய்யுள்)

        நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்து,
        குன்றுழை நண்ணிய சீறுர் ஆங்கண்
        செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால்-