பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அகநானூறு -நித்திலக் கோவை


விளக்கம்: 'கானமர் செல்வி அருளலின்....புரவி எய்திய.... பனுவற் புலவன்’ என்றதனால், காளியின் அருள் பெற்றபுலவர் ஒருவரைப்பற்றிய செய்தி அறியப்படுகின்றது. நாம் செல விழைந்தனமாக.சின்னாள் கழிக என்று முன்னாள் பொய்த்தனர்; ஆயினும் காடு கவின் பெறுக’ என அவன் அருளற்றவனாகத் தன்னைப் பிரிந்துசெல்லினும், தான் அவன்பால் அன்புடையவள் என்பது தோன்றத் தலைவி உரைப்பதனை அறிந்து இன்புறுக.

346. நகையும் நன்றே!

பாடியவர்: நக்கீரர். திணை: மருதம். துறை: தோழி தலைமகற்கு வாயின்மறுத்தது. சிறப்பு: பழையன் மாறனுடனே கிள்ளிவளவன் நடத்திய போரின் செய்தி, அதனாற் கோதைமார்பன் கொண்ட மகிழ்ச்சி.

(தலைமகன் பரத்தைமை கொண்டோனாக இருந்தான். ஒருசமயம், அவன் தன் வீட்டுக்குவந்து. அங்கேதலைவியின் உறவினையும் விழைகின்றான். அப்போது, நேராகத் தலைவியிடம் செல்வதற்கு நாணிய அவன், தன் தலைவியின் தோழியின் உதவியினை நாடுகின்றான். அவள், அவனுக்கு உதவமறுத்து, அவனுடைய ஒழுக்கத்தைப் பழித்து உரைப்பது இச் செய்யுளின் துறையாகும்.)

நகைநன்று அம்ம தானே - இறைமிசை
மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல்
வெள்ளி வெண்தோடு அன்ன கயல்குறித்துக்

கள்ளார் உவகைக் கலிமகிழ் உழவர்
5


காஞ்சிஅம் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை
மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து.
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை

மீதுஅழி கடுநீர் நோக்கிப் பைப்பயப்
10


பார்வல் இருக்கும் பயம்கேழ் ஊர
யாம்அது பேணின்றோ இலமே - நீ நின்
பண்ணமை நல்யாழ்ப் பாணனொடு விசிபிணி
மண்ணார் முழவின் கண்ணதிர்ந்து இயம்ப

மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி
15

எம்மனை வாரா யாகி முன்னாள்