பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 137


(தலைவன் ஒருவனும், தலைவி ஒருத்தியும், தம்முள் கண்டு காதலித்துப், பகற்போதிலே சந்தித்து உறவாடி இன்புற்று வருகின்ற காலத்தில், ஒருநாள், தலைவி தன் தோழியுடன் குறித்த இடத்திலே தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கின்றாள். அப்போது, தலைவன் வந்து ஒருபுறமாக நிற்பதை அறிந்த தோழி, அவர்களின் களவினை அன்னையும் அறிந்தனள் எனச் சொல்வாளாக இப்படிக் கூறுகின்றாள். இதன் நோக்கம், தலைவனைக் களவொழுக்கத்தை நீடித்து மேற்கொள்ளக் கருதுவதனின்றும் மாற்றி, வரைந்து மணந்து கொள்ளுதலிற் செலுத்துவதாகும்.)


          நீலத்து அன்ன நிறம்கிளர் எருத்தின்
          காமர் பீலி ஆய்மயில் தோகை
          இன்தீம் குரல துவன்றி மென்சீர்
          ஆடுதகை எழில்நலம் கடுப்பக் கூடி
          கண்ணேர் இதழ தண்நறுங் குவளைக் 5

          குறுந்தொடர் அடைச்சிய நறும்பல் கூழை
          நீடுநீர் நெடுஞ்சுனை ஆயமொடு ஆடாய்
          உயங்கிய மனத்தை யாகிப் புலம்புகொண்டு
          இன்னை ஆகிய நின்நிறம் நோக்கி அன்னோ!
          வினவினள் ஆயின், அன்னோ! 10


          என்னென உரைக்கோ யானே - துன்னிய
          பெருவரை இழிதரும் நெடுவெள் அருவி
          ஓடை யானை உயர்மிசை எடுத்த
          ஆடுகொடி கடுப்பத் தோன்றும்
          கோடுயர் வெற்பன் உறீஇய நோயே? 15

          தோழி!

நீலமணியினைப்போன்று நிறம் ஒளிர்கின்ற கழுத்தினையும், அழகிய பீலியாகிய சிறந்த தோகையினையும் உடையன மயில்கள். அவை, இனிமைமிக்க குரலினவாகத் தம்முள் நெருங்கின. மெல்லிய தாள அறுதியுடனே ஆடல்பயிலும் ஆடல் மகளிரின் தன்மையைக் கொண்டவாய், அழகுச் சிறப்புடன் அவை ஆடலும் பயில்வ வாயின.

கண்ணை யொத்த இதழ்களையுடைய குவளை மலரின், குறுகிய மாலையினைச் செருகியிருக்கும் நறுமணத்தையுடைய பலவாகிய கூந்தல் பரந்து ஆடுமாறு, ஆழ்ந்த நீரினையுடைய நெடிய சுனையிடத்தே, நின் ஆயமகளிருடன் கூடியவளாக, அம் மயில்களைப்போல நீயும் ஆடாய் ஆயினை! வருத்தமுற்ற மனத்தையும் கொண்டவள் ஆயினை தனிமையினைக்