பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 145


கரிந்து போகாத பூக்களைச் சூடியிருக்கும் பெரியோரான தேவர்கள் உண்ணுதற் பொருட்டாகச், செந்தி ஓங்கிய வேள்விக்குண்டத்தின் கண்ணே இடப்பெற்றயாமையானது, தான் முன்பிருந்த நிழலுடைய நெடிய பொய்கைக்கண் சென்றுவிடலை விரும்பினாற்போல-

முள்போன்ற பற்களையும், சிலவாய சொற்களையும் உடைய நம் தலைவியின் தோள்களைத் தழுவுதலைப்பற்றி, இனி, நீயும் நினைத்தலைச் செய்யாதிருப்பாயாக.

சொற்பொருள்: 1. அம்கண் - அழகிய இடத்தே. 2. மாஇதழ்க் குவளை - கரிய இதழ்களையுடைய குவளை 3. அலமரும் - சுழலும்; கருவிழிகளின் சுழற்சியைக் குறித்தது. பெருமதர்-பெரிய மதர்த்த பெரிதும் மதர்த்த எனலும் ஆம். 6. விலங்கினும் - போழினும்; ஊடறுத்துச் செல்வதாயினும்; அந்த இடைவெளி நேரினும். 6. கவவு - தழுவுதல். புலந்து - ஊடி; வெறுத்து. 7. இன்புறு நுகர்ச்சி - இன்பத்தை அடைதலாகிய நுகர்ச்சி. 9. புரிவு - விருப்பம், மருளி நெஞ்சு - மயங்கிய நெஞ்சு. 10. கரியா - வாடுதலற்ற பெரியோர் யாகத்து அவிர்ப்பாகம் பெறும் தேவர்கள். 1. தித்தியம் - யாக குண்டம். மடுத்த இடப்பெற்ற. 15. வெவ்வறை - வெப்பமிக்க பாறையிடங்கள். வியன்சுரம் - அகன்ற நெடிய சுரம்.

விளக்கம்: முகம் தாமரைப் பூவிற்கும், கண்கள் குவளை மலருக்கும் உவமையாகக் கொள்ளப்பட்டுத், 'தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண் மாயிதழ்க் குவளை மலர் பிணைந்தன்ன எனக் கூறப்படும் நயத்தினை அறிந்து இன்புறுக. நூலிடை ஊடே வெளியேற்படினும், அந்தத் தழுவலிலே மனம் பொருந்தாது ஊடி ஒதுங்கும் கழிபெருங் காமத்தின் தன்மையினை மிகவும் சுவைபடக்கூறுவார், 'இன்புறு நுகர்ச்சியிற் சிறந்தது ஒன்று இல்லை' எனவும் கூறினர் கரியாப் பூவின் பெரியோர் - தேவர்கள்; இவர்களிட்டுள்ள மாலைகள் வாடுதலற்று விளங்குவன என்பது வழக்கு தேவர்க்கு யாமையும் வேள்வியுணவாகக் கொடுக்கப்பெற்ற செய்தி, ‘அழலெழு தித்தியம் அடுத்த யாமை' என்பதனாற் புலனாவது அறிக.

362. நிலங்கொண்ட நிலாக்கதிர்

பாடியவர்: வெள்ளி வீதியார். திணை: குறிஞ்சி. துறை: இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

(களவிற்கூடித் தம்முள் இன்புற்றுவரும் காதலர் இருவர் தம்முடைய காதற்பெருக்கினால் முற்றவும் தம் வயமிழந்தவராக