பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

அகநானூறு -நித்திலக் கோவை


இருக்கின்றனர். ஒருநாள் இரவு தலைவனைக் குறித்த இடத்திற் சந்திப்பது கருதிச் சென்றுள்ள தலைவியுடனே, அவளுடைய தோழியும் இருக்கின்றாள். நிலவு எழுந்தும் அவனை வரக் காணோமே என்பவளாக, அவன் வந்து ஒருசார் நிற்பதறிந்த தோழி, தலைவிக்குச் சொல்லுவது போலத் தலைவனுடைய உள்ளத்திலே மணமுயற்சியில் ஈடுபடற்கு முயலுவதற்கான கருத்தினை விதைக்கின்றாள்.)

பாம்புடை விடா பனிநீர் இட்டுத்துறைத்
தேம்கலந்து ஒழுக யாறுநிறைந் தனவே
வெண்கோட்டு யானை பொருத புண்கூர்ந்து
பைங்கண் வல்லியம் கல்லளைச் செறிய

முருக்கரும்பு அன்ன வள்ளுகிர் வயப்பிணவு
5


கடிகொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற்று என்னான் வென்வேல் ஏந்தி
நசைதர வந்த நன்ன ராளன்
நெஞ்சுபழு தாக வறுவியன் பெயரின்

இன்றிப் பொழுதும் யான்வா ழலனே
10


எவன்கொல்? - வாழி தோழி - நம் இடைமுலைச்
சுணங்கணி முற்றத்து ஆரம் போலவும்
சிலம்புநீடு சோலைச் சிதர்துங்கு நளிர்ப்பின்
இலங்குவெள் அருவி போலவும்

நிழல்கொண் டனவால், திங்கள்அம் கதிரே!
15

தோழி வாழ்க!

பாம்புகளையுடைய மலைப் பிளப்புக்களினின்றும் பாய்ந்து வருகின்ற குளிர்ந்த நீரானது, ஒடுக்கமானதுறைகளின் வழியாகத் தேனுடன் கலந்ததாகி ஒழுகிக்கொண்டிருக்க, அதனால், யாறுகளும் நிறைவுற்றன.

வெண்மையான கொம்புகளையுடைய களிற்றியானை குத்தியதனால், புண்மிகுந்த பசிய கண்களையுடைய புலியானது கற்குகையிற் சென்று பதுங்கியிருக்கும். செம்முருக்கம் பூவினது அரும்புகளைப் போன்ற கூர்மையான நகத்தினையுடைய, வலிமையுள்ள அதன் பெண்புலியானது, அக்குகைவாயிலைக் காத்ததாக இருக்கும். இதனால், அவ்வழியே செல்வார் ஒருவரும் இலராவர்.

அந்நிலைப்பட்ட மலைப்பகுதியிலே, இரவு வந்துற்ற தெனவும் அவன் கருதமாட்டான். வெற்றி வேலை ஏந்தியவனாக, நம்பாற் கொண்ட ஆசையானது மிகுதலால், வந்த நம்மையாளன் நம் தலைவன். அவன், தன் எண்ணம் பழுது