பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 195



இதனால், அந்நாளில் ஏவலர்க்கும், தலைவர்க்கும் இருந்த உளங்கலந்த உறவின் அமைதியும் நன்கு புலனாகும்.

மேற்கோள்: 'பெருந்தேர் யானும். மருண்டிசினே என்னும் பகுதியை, 'மருட்கை' என்னும் மெய்ப்பாட்டிற்கு மேற்கோளாகப், புதுமை, பெருமை என்னும் சூத்திர உரையிற் காட்டுவர் இளம்பூரணனர்.

இச்செய்யுளைக் காட்டி, இதனாற் பாகன் சிறப்புக் கூறியவாறு காண்க எனக், கரணத்தின் அமைந்து முடிந்த காலை' என்னும் சூத்திரத்துப், 'பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும் என்னும் பகுதிக்கண் நச்சினார்க்கினியர் காட்டினர்.

இதனுள் ‘புரிந்த காதலொடு. நின்மனம் பூட்டினையோ உரைமதி வாழியோ, வலவ! என்பதனைக் காட்டி, உள்ளம் போல் உற்றுழி உதவிற்று எனத் தலைவன் கூறியவாறு காண்க என 'வினை.வயிற் பிரிந்தோன்’ என்னுஞ் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் உரைப்பர்.

385. கொடிது கொடிது!

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார். திணை: பாலை. துறை: மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. சிறப்பு: திருமணப் புனைவுகள்.

(தன் மகள், தான் காதலித்த இளைஞனுடன் கூடி உடன் போக்கிலே சென்றுவிட்டாளாக, அவளை நினைத்து ஏக்கமுற்றுப் புலம்பும் செவிலித்தாயின் கூற்றாக விளங்கும் செய்யுள் இது)

          தன்னோ ரன்ன ஆயமும் மயிலியல்
          என்னோ ரன்ன தாயரும் காணக்
          கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
          காவிரிப் படப்பை உறந்தை அன்ன
          பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர 5

          நன்மாண் விழவில் தகரம் மண்ணி
          யாம்பல புணர்ப்பச் செல்லாள் காம்பொடு
          நெல்லி நீடிய கல்லறைக் கவாஅன்
          அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ்
          தித்திக் குறங்கில் திருந்த உரிஞ 1O

          வளையுடை முன்கை அளைஇக் கிளைய
          பயிலிரும் பிணையல் பசுங்காழ்க் கோவை
          அகலமை அல்குல் பற்றிக் கூந்தல்
          ஆடுமயிற் பீலியின் பொங்க நன்றும்
          தானமர் துணைவன் ஊக்க ஊங்கி 15