பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 9


கண்ட கனவு என்றேனும், பேயைக் கண்ட கனவு என்றேனும் உரைக்க, கொடுந்தன்மையுடைய பேய் காணும் கனவும், மிக்க கொடுமைத் தன்மையுடையதாக இருக்கும்; அதுபோல நுட்பமாகப் பொருந்திய காமத்தின் கொடுமையும் இருத்தலாயிற்று. காமத்தால் இவள் இறந்தே போவாள்; அவ்வுடல் நமக்கு நல்ல உணவு என்று அதனை உண்பதுபோலப் ‘பேய் காணும் கனவு’ என்று கொள்வதாயின் உரைக்க நனவிலே உறக்கமின்றிப் படும் துயரம் போதாதென, அயர்ந்து உறங்க முயன்ற காலத்தும் பேயைக் கனவிற் கண்டு மீளவும் உறக்கமின்றி நடுங்கியிருக்கும் நிலைபோலத் துன்பஞ் சூழ்ந்த காமநிலை என்று, 'பேயைக் கண்ட கனவில்' எனக் கொள்ளும்போது உரைத்துக் கொள்ளுக. 4. பசும் பூண் பொறையன் - பசிய பூண்களை உடையோனாகிய பொறையன். 5. புகன்று முழங்கி. 7 ததைந்து - மிக்குப் பெருகி. 12. முடங்குபுறம் - வளைந்த மேற்புறம் 13. கொட்பின் - குறிக்கோளை உடையன. 17. வறன்மரம் - வற்றி உலர்ந்த மரம். இது பாலையின் கொடிய வெப்பத்தைக் காட்டுமாறு கூறியது. 19. 'அழிநீர் மீன் பெயர்தல்' - அழிகுளத்து மீன்கள் புதிய நீர்வரத்தினைக் கண்டால், அதன்வழி மேலேறிச் செல்லல்.

அழிகுளத்து மீன் அவளாகவும், புதுவெள்ளம் அவனாகவும், வெள்ளத்தைச் சாருகின்ற பாய்கால் சுரனாகவும் கொள்க. அவன் பிரிவினால் எழுந்த அலர் கொல்லிமலையிலே அருவிநீர் ஆரவாரித்து விழும் ஒலிமிகுதிக்குச் சமமாயிருந்தது என்கின்றனள். பறம்பினின்றும் குருவியினம் காலை போய் மாலை வருவதுபோலத், தன் காதலனும் காலைச் சென்றவன் மாலையே வருவான் என, அவன் பிரிந்தஞான்று தான் எதிர்பார்த்த பேதைமை தோன்ற, ' நெஞ்சம்' என்றனள். அத்தகைய நெஞ்சமே! இன்றுவரை அவர் வராத கொடுமையினை நீ பொறுப்பது என்னை? வருவார் என்று நீ கொள்ளும் ஐயத்தைத் தெளிவாயாக’ என்கின்றாளுமாம்.

304. நொந்து கொள்வாளோ?

பாடியவர் : இடைக்காடனார். திணை : பாலை. துறை : பாசறைக்கண், தலைமகன். தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(அரசனுக்காகச் செய்யும் போர்ப்பணியினை மேற் கொண்டவனாகச் சென்று, பாசறையிலே தங்கியிருக்கிறான் ஒரு தலைவன். அத் தலைவனின் மனம் இப்படி இரவுப் போதில், தன் காதலுக்குரியாளை நினைந்து வேதனைப்படுகிறது. 'திரும்புவதாகத் தான் குறித்து வந்த காலத்தும் குறித்த வாக்குத் தவறாமல்