பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

அகநானூறு - நித்திலக் கோவை



திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய்
அரிமதர் மழைக்கண் கலுழச் செல்வீர்!
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
உவருணப் பறைந்த ஊன்தலைச் சிறாஅரொடு
அவ்வரி கொன்ற கறைசேர் வள்ளுகிர்ப் 5

பசைவிரற் புலைத்தி நெடிதுபிசைந்து ஊட்டிய
பூந்துகில் இமைக்கும் பொலன்காழ் அல்குல்
அவ்வரி சிதைய நோக்கி வெவ்வினைப்
பயிலரிற் கிடந்த வேட்டுவிளி வெரீஇ
வரிப்புற இதலின் மணிக்கட் பேடை 10

நுண்பொறி அணிந்த எருத்தின் கூர்முட்
செங்காற் சேவற் பயிரும் ஆங்கண்
வில்லீண்டு அருஞ்சமம் ததைய நூறி
நல்லிசை நிறுத்த நாணுடை மறவர்
நிரைநிலை நடுகற் பொருந்தி இமையாது 15

இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி
சிறிய தெற்றுவ தாயிற் பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
நின்றாங்குப் பெயரும் கானம்
சென்றோர் மன்னென இருக்கிற் போர்க்கே. 20

திருத்தமான இவளுடைய அணிகள் நெகிழ்ந்து போகவும், பெருத்த இவளுடைய தோள்கள் மெலிவுற்றுப் போகவும், இவளுடைய செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் கலங்கி நீரொழுகவுமாகச் செல்லுதலைக் குறித்த தலைவரே!

உவர்மண் அரித்தலாலே மயிர்கழிந்து போய்த் தோன்றும் ஊன் பொருந்திய தலையினரான சிறுவர்களுடனே, ஆடையின் கறைகளைச் சிதைத்தலாற் கறை பொருந்திய கூர்மையான நகத்தினையும், கஞ்சிப் பசை விளங்கும் விரல்களையும் கொண்டவள். புலைத்தியாகிய ஆடைஒலிப்பவள். அவள், நெடுநேரம் பிசைந்து கஞ்சியூட்டிய அழகிய துகிலானது அமைந்து ஒளிசெய்யும், பொன்வடம் அணிந்த தன் அல்குல் தடத்தினிடத்தேயுள்ள அழகிய இரேகைகள் சிதைவுற்றுப்போக, அதனைப் பார்த்து -

ஆறலைத்தலாகிய கொடிய செயலைச் செய்பவரும், பிணக்கம் பொருந்திய காடுகளிலே பதுங்கிக் கிடப்பவருமாகிய வேட்டுவரது கூப்பீட்டொலியைக் கேட்டுப், பிறத்தே வரிகளையுடைய காடையின் நீலமணி போன்ற கண்களை யுடைய பேடையானது அச்சமுற்று, நுண்ணிய புள்ளிகளமைந்த