பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

அகநானூறு - நித்திலக் கோவை


கூடாதென்று அச்சமுற்று அழைக்கும் தன்மையை உரைத்ததாம். இதனால், தலைவியும் தலைவனுக்கும் ஊறு நேருமென அஞ்சிக் கலங்குவள் என்றனள்.

'முதுவாய்ப் பல்லி தெற்றுவதாயின் பெரிய ஓடையானை உயர்ந்தோராயினும் ஆங்கு நின்று பெயரும் கானம்’ எனவே, பல்லியின் சொல்லுக்குப் பலன் கண்டு மேற்கொள்ளும் வழக்கம் உடைமையினையும் அறிக.

388. கேட்டால் என்னையோ?

பாடியவர்:' ஊட்டியார். திணை: குறிஞ்சி. துறை: இரவுக் குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குக் சொல்லியதும் ஆம்.

(தலைமகளும் தலைமகனும் இரவுக்குறியின்கண் தம்முட்கூடி இன்புற்று வருகின்ற காலத்தே, ஒருநாள், அன்னை தலைவிக்கு அணங்கியதென வெறியாடலுக்கு ஏற்பாடு செய்ய, அது குறித்துத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாக, ஒரு புறம் வந்து நிற்கும் தலைமகனும் கேட்டு மணவினையில் மனஞ் செலுத்துமாறு கூறுகின்றனள். இந்த முறையில் அமைந்த செய்யுள் இது. தோழிக்குத் தலைவி உரைத்ததாகவும் கொள்ளலாம். அதற்கும் விரைவில் வரைந்து கொள்ளுமாறு தலைவனைத் தூண்டுதலே குறிப்பாகும்.)

அம்ம! வாழி தோழி! - நம்மலை
அமையறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின்
நறுவிரை ஆரம் அறவெறிந்து உழுத
உளைக்குரல் சிறுதினை கவர்தலின் கிளையமல்
பெருவரை அடுக்கத்துக் குரீஇ ஒப்பி 5

ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளினர் நறுவீ
வேங்கையம் கவட்டிடை நிவந்த இதணத்துப்
பொன்மருள் நறுந்தாது ஊதும் தும்பி
இன்னிசை ஓரா இருந்தன மாசு
“மையிர் ஓதி மடநல் லிரே!" 10

'நொவ்வியிற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர்மருப்பு ஒருத்தல்நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று' என
சினவுக்கொள் ஞமலி செயிர்த்துப்புடை ஆடச்
சொல்லிக் கழிந்த வல்விற் காளை 15

சாந்தார் அகலமும் தகையும் மிகநயந்து
ஈங்குநாம் உழக்கும் எவ்வம் உணராள்